மத்திய அரசு, ஒன்றிய அரசு – ஓபிஎஸ் என்ன சொல்றார் தெரியுமா?

சென்னை (04 ஜூலை 2021): மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ”தேசியத்திற்கு எதிரான செயல்கள் நடப்பதை பார்க்கும் போது தமிழ்நாடு திசைமாறி செல்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இந்திய அரசை ஒன்றிய அரசு என சொல்வது தாய் திருநாட்டை கொச்சைப்படுத்துவது போல் ஆகும். யூனியன் என்றால் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய இந்திய நாட்டைக் குறிக்கும் சொல். கூட்டாட்சி தத்துவம் குறித்து தலைவர்கள் கூறியதை வைத்து ஒன்றிய…

மேலும்...

ஏழு தமிழர்கள் – இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி அமைச்சர் ரகுபதியிடம் மனு!

சென்னை (03 ஜுலை 2021): ஏழு தமிழர்கள், இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் மற்றும் வீரப்பன் அண்ணன் மாதையன் ஆகியோர்களை கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி NCHRO ஒருங்கிணைப்பாளர்கள் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியை சந்தித்து மனு அளித்தனர். திமுக ஆட்சிப்பொறுப்பில் அமைந்தது முதல் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏழு தமிழர்கள், இஸ்லாமிய ஆயுள் சிறைவாசிகள் விடுதலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில் ஏழு…

மேலும்...

தமிழ்நாடுதான் டாப், டெல்லி, பீகார் படுமோசம் – ஆய்வறிக்கை வெளியீடு!

புதுடெல்லி (03 ஜூலை 2021): கொரோனா 2ஆம் அலையை தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்கள் சிறப்பாக கையாண்டதாகவும், டெல்லி, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மோசமாகக் கையாண்டு உள்ளதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா 2ஆம் அலை அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை கூட சென்றது. அதேபோல தினசரி உயிரிழப்புகளும் நான்காயிரம் வரை கூடச் சென்றது. ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக…

மேலும்...

கம்ப்யூட்டர் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் மாணவர்கள் – நீதிமன்றம் கவலை!

சென்னை (01 ஜூலை 2021): ஆன்லைன் வகுப்புகளுக்கு பயன்படுத்தும் செல்போன், கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளையாட்டுகளை தடை செய்யவும், இதுதொடர்பாக ஆய்வு செய்து கண்காணிப்பதற்கான நடைமுறையைக்  கொண்டு வரக்கோரியும் மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பில் அஜரான வழக்கறிஞர், “ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகளும், இளம் பருவத்தினரும், மாணவர்களும் விளையாட்டுகளில் உள்ள கதாபாத்திரங்களாக மாறிவிடுவதுடன், வன்முறை…

மேலும்...

ஒன்றிய அரசு என அழைக்கலாமா? – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை (01 ஜூலை 2021): ஒன்றிய அரசு என சொல்வதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது திண்டுக்கல்லைச் சேர்ந்த ராமசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “திமுக புதிய அரசாங்க பொறுப்பேற்ற பின்பு இந்திய அரசை “ஒன்றிய அரசு” என்று கூறிவருகிறது மேலும் இவ்வாறு அழைப்பதை ஊக்கப்படுத்துகிறது. ஒன்றியம் என்ற வார்த்தையை பயன்படுத்துவது தவறானது. இந்திய தேசிய இறையாண்மைக்கு எதிரானது…

மேலும்...

மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன் – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

சென்னை (30 ஜூன் 2021): கொரோனா தொற்று காரணமாக சிகிச்சைக்குப் பிறகு வீட்டில் தனிமை படுத்தலில் உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தன்னை குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா தொற்று இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது எனது இல்லத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின் படி தனிமைப்படுத்தி உள்ளேன். ஆகவே அடுத்த பதினைந்து தினங்கள் நான் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் யாரும் என்னை…

மேலும்...

தமிழ் நாட்டில் கொரோனாவால் ஒரேநாளில் 118 பேர் பலி!

சென்னை (30 ஜூன் 2021): கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 118 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 32,506 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் செவ்வாயன்று 4,512 பேர் புதிதாக கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,75,190 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 275 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில்…

மேலும்...

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெரியப்பா கைது!

சென்னை (29 ஜூன் 2021): 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய, சிறுமியின் பெரியப்பா சென்னையில் கைது செய்யப் பட்டுள்ளார். தாய், தந்தையை இழந்த 13 வயது சிறுமி சென்னை வேப்பேரியில் தனது சித்தி வீட்டில் தங்கிருந்து எட்டாம் வகுப்பு படித்து வந்தார். சமீபத்தில் திடீரென சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் சித்தி. மருத்துவப் பரிசோதனையில் சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சித்தி, சிறுமியிடம் விசாரித்தபோது…

மேலும்...

நீட் தேர்வு விவகாரத்தில் திடீர் திருப்பம் – நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி!

சென்னை (29 ஜூன் 2021): “நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது!” என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய குழுவை நியமித்து தமிழக அரசு, ஜூன் 10ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால், மாற்று வழி குறித்தும்,…

மேலும்...

காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸுக்கு தமிழக அரசு புதிய பதவி!

சென்னை (29 ஜூன் 2021): தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் திருத்தி அமைக்கப்பட்டு, அதன் தலைவராக முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் நியமனம் செய்யப் பட்டுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் வாழும் மதம் மற்றும் மொழி வாரியான சிறுபான்மையினரின் நலன்களைப் பேணிக் காத்திடவும், அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் கடந்த 1989 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாளன்று அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்…

மேலும்...