மின் கட்டணம் செலுத்த இன்று கடைசி நாள்!

கரூர் (15 ஜூன் 2021): மின் கட்டணம் செலுத்த இனி நாட்கள் நீட்டிக்கப்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ”மின்கட்டணம் செலுத்த இன்றே கடைசி நாள். அவகாசம் இனியும் நீட்டிக்கப்பட மாட்டாது. 50 சதவீதப் பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டதால் அவகாசம் தேவைப்படாது. மே 10ஆம் தேதிமுதல் மின் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் அபராதமின்றி கட்டணத்தைக் கட்ட இன்று கடைசி நாள்” என்றார். ஏற்கனவே…

மேலும்...

கூட்டணியில் சலசலப்பு – ஓபிஎஸ், இபிஎஸ் திடீர் முடிவு!

சென்னை (14 ஜூன் 2021): சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர். அதிமுகவுடன் பா.ம.க. மட்டும் கூட்டணியில் இல்லாமல் இருந்தால் அதிமுக 20 இடங்களில் கூட ஜெயித்திருக்காது என பாமகவின் இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி,யுமான அன்புமணி விமர்சித்திருந்தார். இதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனை தொடர்ந்து அதிமுகவின்…

மேலும்...

திமுக அரசின் முடிவுக்கு பாஜக வரவேற்பு!

சென்னை (14 ஜூன் 2021): பெண்களை கோயில் அர்ச்சகர்களாக நியமிக்க திமுக அரசு எடுத்த முடிவை தமிழக பாஜக வரவேற்றுள்ளது. முன்னதாக இந்து மதத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் முடிவை தமிழக பாஜக தலைமை வரவேற்றது. இந்நிலையில் பெண்களை கோயில் அர்ச்சகர்களாக நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் பெண்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆர்வமுள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

சென்னை (14 ஜூன் 2021): பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு இல்லை என்றால் முழு ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தபப்டும் என்று தமிழ் நாடு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில், “தொடர்ச்சியாக மேற்கொண்ட நடவடிக்கைகளால் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவும் சங்கிலித் தொடரை உடைக்க மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கை மக்கள் முழுமையாக கடைபிடித்ததால் தான் இந்தளவிற்கு கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. எனவே விதிமுறைகளை…

மேலும்...

அயோத்தியில் ராமர் கோவில் நிலம் பத்திரப் பதிவில் மோசடி!

அயோத்தி (14 ஜூன் 2021): அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிலம் வாங்கியதில் மோசடியில் ஈடுபட்டதாக ராமர் கோவில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. கட்டுமான பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில், ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளையை ஒன்றிய அரசு நியமித்துள்ளது. 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அறக்கட்டளையில் 12 பேரை ஒன்றிய…

மேலும்...

துரைமுருகன், கிஷோர்,மதனை தொடர்ந்து அடுத்து சிக்கும் யுடூபர்!

சென்னை 914 ஜூன் 2021): துரைமுருகன், கிஷோர்,மதன் ஆகிய சமூக வலைதள பிரபலங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்திருப்பது சமூக வலைதள யூசர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சமூக ஊடக தளங்கள் மக்களின் அரசியல் கொள்கையையும், அன்றாட வாழ்க்கையையும் மாற்ற கூடிய சக்தி கொண்ட ஊடகமாக மாறிவிட்டது. அதன் ஒரு பகுதியாக சமீபத்திய வரவான கிளப் ஹவுசில் நடக்கும் விவாதங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் நாம் தமிழர் ஆதரவாளரும் யுடூப்பருமான சாட்டை துரைமுருகன் திருச்சியில் வினோத்…

மேலும்...

அந்த சூழலிலும் மாணவியை அவர் விடவில்லை – சின்மயி பரபரப்பு தகவல்!

சென்னை (13 ஜூன் 2021): மாதவிடாய் காலத்தில் பள்ளிக்கு விடுப்பு எடுத்த மாணவியை, பாலியல் ரீதியான கேள்விகள் மூலம் ஆசிரியர் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சின்மயி தனது ட்விட்டரில் பதிவிடுகையில் பிஎஸ் சீனியர் செகண்டரி பள்ளியைச் சேர்ந்த 8 ஆசிரியர்கள் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த 8 பேரில் ஒருவர் பெண் குழந்தைகளை தவறாக படமெடுத்துள்ளார். அந்த 8 பேர் ஞானசேகரன், குருமூர்த்தி, பத்மநாபன், கலைமணி, பிரபாகரன்,…

மேலும்...

பிரபல இயக்குனர் ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்கு!

திருவனந்தபுரம் (12 ஜூன் 2021): ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள லட்சத்தீவுகளின் நிர்வாக தலைவராக பிரபுல் ஹோடா படேல் பாஜக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். பிரபுல் ஹோடா படேல் தலைமையிலான நிர்வாகம், அங்கு மாட்டு இறைச்சி பயன்பாட்டிற்கு தடைவிதிக்கவும், மது அருந்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும், சட்டவிரோதமாக மீனவர்களால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக குடிசைகளை அப்புறப்படுத்தவும் சட்டம் இயற்றப்பட உள்ளது. லட்சத்தீவுகளில் பெரும்பான்மை மக்கள் தொகையாக இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள் உள்ள நிலையில் நிர்வாகத்தின் சீர்திருத்தங்களுக்கு மக்களிடையே பெரும்…

மேலும்...

ஸ்டாலின் டெல்லி பயணமும் எதிர் பார்ப்பும்!

சென்னை (12 ஜூன் 2021): ஸ்டாலினின் டெல்லி பயணம் பல்வேறு தரப்பிலும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 17 அல்லது 19 ஆகிய தேதிகளில் சந்திப்பு நிகழலாம் என கூறப்படுகிறது. டெல்லி பயணத்தின் போது குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரையும் சந்திக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நீட்…

மேலும்...

இதென்ன மாபெரும் குற்றமா? – கொந்தளித்த சீமான்!

சென்னை (12 ஜூன் 2021): திருச்சி கே.கே. நகரில் கார் உதிரி பாகன நிறுவனத்தில் புகுந்து, அதன் உரிமையாளரை மிரட்டியதாக, யூ டியூபர் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழ்த் தேசிய இனத்தின் ஒப்பற்ற தேசியத் தலைவர் வே.பிரபாகரனைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி…

மேலும்...