நடிகை கர்ப்பம் – முன்னாள் அமைச்சர் கைது!

சென்னை (20 ஜூன் 2021): நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பெசன்ட்நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி. நாடோடிகள் சினிமா படத்தில் நடித்துள்ளார். மலேசியா நாட்டின் குடியுரிமை பெற்ற இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக சொல்லி உறவு வைத்தார். 5…

மேலும்...

ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது? – பீதியை கிளப்பும் நத்தம் விஸ்வநாதன்!

சென்னை (19 ஜூன் 2021): ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி சசிகலாவுக்கு மட்டுமே தெரியும் என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா உறவினர்கள், சசிகலா, அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியது. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த…

மேலும்...

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் – இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது!

சென்னை (19 ஜூன் 2021): தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படலாம் என்று தெரிகிறது. கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்த தமிழக அரசின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மருத்துவ வல்லுனர்கள், சுகாதாரத்துறை, அரசுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்த அறிவிப்பை இன்று மாலை வெளியிடுவார் என்று தெரிகிறது. கட்டுப்பாடுகளுடன் நகைக்கடை, துணிக்கடை மற்றும் பேருந்து சேவையை உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா குறையாத…

மேலும்...

நீட் தேர்வு குறித்து மாணவர்களுக்கு நடிகர் சூர்யா கோரிக்கை!

சென்னை (19 ஜூன் 2021): நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரசுக் குழுவிடம் தெரிவிக்க வேண்டும் என நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அகரம் ஃபவுண்டேஷன் சார்பில் நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் யில் கூறியிருப்பதாவது: அரசுப்பள்ளியில் படித்து உயர்கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ‘கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க ‘ஒரே தேர்வு முறை’ என்பது சமூக…

மேலும்...

தமிழ் நட்டு வளர்ச்சிக்காக அடுத்த அதிரடியில் இறங்கும் ஸ்டாலின்!

சென்னை (19 ஜூன் 2021): அரசுமுறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் லண்டன் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாகவும் அதில் கலந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்காகவும் ஸ்டாலின் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது பல நாடுகளில் லாக்டவுன் போடப்பட்டு, அதற்கான தளர்வுகளும் ஒவ்வொருவரும் அறிவித்து வருகிறார்கள். இந்நிலையில், ஸ்டாலின் லண்டன் பயணத்துக்காக அனுமதியும் கோரப்பட்டிருந்த நிலையில், தற்போது, அதற்கு அனுமதியும் ம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இந்த பயணத்தின்…

மேலும்...

துபாயில் கொரோனாவுக்கு தாயை பறிகொடுத்து தனியே தமிழ்நாடு வந்த கைக்குழந்தை!

திருச்சி (18 ஜுன் 2021): துபாயில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தாய் உயிரிழந்த நிலையில், அவருடன் வசித்த குழந்தை நேற்று திருச்சி வந்தடைந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தேரி தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலன் (38) – பாரதி (38) தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. அதன்பிறகு மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர். இதில், முதல் குழந்தை நுரையீரல் கோளாறு காரணமாக ஏற்கனவே இறந்துவிட்டது. குடும்ப வறுமை காரணமாக தவித்துவந்த நிலையில், கடந்த மார்ச்…

மேலும்...

இதைத்தான் எதிர் பார்த்தோம் – திமுக அரசை கொண்டாடும் மக்கள்!

சென்னை (18 ஜுன் 2021): கொரொனா தொற்று குறையாத 11 மாவட்டங்களில் இலவச உணவு திட்டம் தொடரும் என்று தமிழ்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இப்போதுகூட கொரோனா தொற்று அதிகமாகிவிட்ட நிலையில், யார் கையிலும் காசு இல்லாத நிலையில், இந்த உணவு திட்டம் பேருதவியாகி கொண்டிருக்கிறது.. அதற்கான முன்னெடுப்பை திமுக அரசு கையில் எடுத்துள்ளது.. ஏற்கனவே ரேஷன் அட்டைகளுக்கு 4000 ரூபாய், மளிகை பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல, மற்றொருபக்கம் அறநிலைய துறை சார்பாகவும், கோயில்கள் மூலம் உணவு…

மேலும்...

ஆபாச மன்னன் மதன் சிக்கியது எப்படி? – பரபரப்பு பின்னணி!

தருமபுரி (18 ஜுன் 2021): பப்ஜி விளையாட்டு ஆபாச மன்னன் மதன் தர்மபுரியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். யூ டியூபில் பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளின் ட்ரிக்குகளை சொல்லி தருவதாக சேனல் நடத்தி வந்தவ யூ டியூப் கேமர் மதன் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். பெண்களிடம் தவறாக பேசுதல், வீடியோ எடுத்து மிரட்டுதல், பண மோசடி, இளம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, டெலிகிராமில் ஆபாச வீடியோக்களை விற்பனை செய்வது என்று பல்வேறு புகார்கள் கேமர் மதன் மீது வைக்கப்பட்டுள்ளது….

மேலும்...

சிஏஏ ரத்து – முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் முன்வைத்த கோரிக்கைகள்!

புதுடெல்லி (17 ஜூன் 2021): தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை பிரதமர் மோடியை, அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது சிஏஏ ரத்து உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தார். பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் பிரதமரிடம் முன் வைத்த கோரிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தெஇவித்ததாவது: * கூடுதலான தடுப்பூசியைத் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டும். * செங்கல்பட்டு மற்றும் ஊட்டியில் உள்ள தடுப்பூசி தொழிற்சாலைகளை உடனடியாகச் செயல்பட வைக்கவேண்டும். * தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிதி…

மேலும்...

பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்!

புதுடெல்லி (17 ஜூன் 2021): தமிழ் நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மாலை 5 மணியளவில் பிரதமர் மோடி – தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவருடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளும் உடனிருந்தனர். அப்போது தமிழ்நாட்டிற்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வலியுறுத்தினார். நீட் தேர்விலிருந்து விலக்கு,…

மேலும்...