கிஷோர் கே சாமி மீது பாய்ந்தது இன்னொரு வழக்கு!

சென்னை (17 ஜூன் 2021): பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள யூடூபர் கிஷோர் கே சாமி மீது நடிகை ரோஹிணி போலீசில் புகார் அளித்துள்ளார். அம்பேத்கர், பெரியார் முதல், ஸ்டாலின் வரை யூடியூபில் அம் வாய்க்கு வந்தபடி பேசும் கிஷோர் கே சாமிபத்திரிகையாளர்களையும் விட்டு வைக்க மாட்டார்.. பொதுவெளி என்றும் பாராமல், பத்திரிகையாளர்களை மிக கேவலமாக பேசுவார். முந்தைய அதிமுக ஆட்சியிலேயே புகார் இருந்தபோதும் அவர் மீது அப்போதைய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பொது திமுக…

மேலும்...

பயாலாஜிக்கல் – இ கோவிட் தடுப்பூசி 90 சதவீத பாதுகாப்பு!

புதுடில்லி (17 ஜூன் 2021): : இந்தியாவில் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ள பயாலிஜிக்கல் – இ நிறுவனத்தின் தடுப்பூசி, கோவிட்டிற்கு எதிராக 90 சதவீதம் திறனுடையது எனவும், இந்த தொற்றை பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என, மத்திய அரசின் ஆலோசனை குழு டாக்டர் தெரிவித்து உள்ளார். 90 சதவீத திறன் பெற்ற இந்த மருந்து தற்போது 3வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது என்றும் வரும் அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும் என்றும்…

மேலும்...

வானதியை கிண்டலடித்த எஸ்வி சேகர் – முகம் சுளிக்கும் பாஜகவினர்!

சென்னை (17 ஜூன் 2021): பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனை எஸ்வி சேகர் கிண்டலடிக்கும் வகையில் டிவிட்டரில் பதிவிட்டிருப்பது பாஜகவினரை முகம் சுழிக்க வைத்துள்ளது. கோவை தெற்கு தொகுதியில போட்டியிட்டு கடைசி நேர இழுபறியில் கமலை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றவர் பாஜக வானதி. இவர் 3 நாளைக்கு முன்பு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவகத்தை திறந்து வைத்தார். இதன் திறப்பு விழாவில், வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசன், மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்…..

மேலும்...

மனைவியை வைத்தே ஆபாச தொழில் செய்த கணவன் – மனைவி அதிரடி கைது!

சென்னை (17 ஜூன் 2021); யூடுப் மூலம் பல பெண்களிடம் ஆபாசமாக பேசிய யுடூபர் மதனின் மனைவி கிருத்திகாவை சென்னை மத்திய குற்றப்பரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ம யூடியூப் சேனல் நடத்தி வரும் மதன் என்பவர் தனது யூடியூப் சேனல்களில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டின் மூலம் சிறுவர்களை தவறான பாதைக்கு திசை திருப்புவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே நேரத்தில் தன்னுடன் தொலைபேசியில் உரையாடும் இளம்பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளை மதன் பேசுவதும் தெரிய வந்தது. இதுதொடர்பாக…

மேலும்...

வேஷத்தை மாற்றினால் விட்டுவிடுவாங்களா? – வசமாக சிக்கிய பாபா!

புதுடெல்லி (16 ஜூன் 2021): டெல்லியில் சிக்கிய சிவசங்கர் பாபாவை சென்னைக்கு அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர். இதுதொடர்பான வழக்கில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ உட்பட 8 பிரிவுகளின்கீழ் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்…

மேலும்...

கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்!

தூத்துக்குடி (16 ஜூன் 2021): தூத்துக்குடியில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளது. தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் மனைவி வித்யா(25). கர்ப்பிணியான இவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து ஆக்சிஜன் குறைவு காரணமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு சிறுநீரகம், கல்லீரலிலும் பாதிப்பு ஏற்பட்டதால் அவசரமாக அறுவை சிகிச்சை மூலம் முதல் பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தன. 3 குழந்தைகளுக்கும் பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இல்லை…

மேலும்...

தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா அதிரடி கைது!

புதுடெல்லி (16 ஜூன் 2021): பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இதுகுறித்த புகாரின் அடிப்படையில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது….

மேலும்...

முஸ்லீம் வயோதிகர் தாக்கப்பட்டதை வெளியிட்ட ட்விட்டர், ஊடகவியலாளர் மீது வழக்கு பதிவு!

லக்னோ (16 ஜூன் 2021): காசியாபாத்தின் லோனியில் வயதான முஸ்லீம் நபர் தாக்கப்பட்ட சம்பவத்தை வெளியிட்ட ட்விட்டர், ஊடகவியலாளர்கள் மற்றும் இரண்டு காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக உத்தரபிரதேச அரசு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. உள்ளூர் போலீஸ்காரர் அளித்த புகாரின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் காசியாபாத்தில் உள்ள லோனி பார்டர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரின்படி , வகுப்புவாத அமைதியின்மையைத் தூண்டும் நோக்கத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளது. முன்னதாக உத்தரப் பிரதேச…

மேலும்...

அந்த ஒருமணி நேர ஆடியோ – ஓபிஎஸ்சுக்கும் ஆப்பு? – பரபரப்பில் அதிமுக!

சென்னை (15 ஜூன் 2021): சசிகலாவுடன் அதிமுக நிர்வாகிகள் பேசும் ஆடியோ வெளியாகிவரும் நிலையில் அதிமுகவில் சசிகலாவுடன் பேசியவர்களை கட்சியை விட்டு நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. . சசிகலாஅதிமுக நிர்வாகிகளுடன் பேசி ஆடியோக்களை வெளியிட்டு எப்போது வேண்டுமானாலும் கட்சியைக் கைப்பற்றுவேன் என சொல்லாமல் சொல்லி வருகிறார். ஏற்கனவே இரட்டை தலைமையில் இருக்கும் கட்சிக்கு இது பெரிய தலைவலியை ஏற்ப்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்து வந்த புகழேந்தி பாமகவுக்கு எதிராக கருத்து சொல்லவும்…

மேலும்...

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டலே அதிக பாதுகாப்பு!

புதுடெல்லி (15 ஜூன் 2021): தொற்றில் இருந்து மீண்டவர்கள் ஒரு டோஸ் போட்டுக்கொண்டாலே அதிக பாதுகாப்புடன் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டதற்கு முன்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம், நடத்திய ஆய்வில், அவர்களுக்கு, ஒரு டோஸ் தடுப்பூசி கொடுக்கப்பட்டதிலேயே, நிறைய ஆன்டிபாடிகள் உடலில் உற்பத்தி செய்யப்பட்டன என்று ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. அதேசமயம் தொற்று ஏற்படாதவர்களில், ஆன்டிபாடிகள் குறைவாகவே இருந்தன. கோவிட்டால் பாதிக்கப்படுகையில், உடல் அதை எதிர்த்துப் போராடுவதற்கு ஆன்டிபாடி என்னும் நோய் எதிர்ப்பு சக்தியை…

மேலும்...