கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ 5 லட்சம் டெபாசிட் – ஸ்டாலின் அதிரடி!

சென்னை (29 மே 2021): கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் வைப்புத்தொகையாக வழங்கப்படும். பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு உடனடியாக 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வைப்பு தொகையாக அவர்களது வங்கிக் கணக்கில் வைக்கப்படும். அந்த குழந்தைகள் 18 வயதை நிறைவு…

மேலும்...

ஊரடங்கு காலத்தில் 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு – நியாய விலை கடைகள் மூலம் வழங்க முதல்வர் உத்தரவு!

சென்னை (28 மே 2021):கொரோன பரவலை கட்டுக்குள் கொண்டு வர முழு ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படுவது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் நடத்திய…

மேலும்...

முன்னாள் அதிமுக அமைச்சருடன் கள்ள உறவு – பிரபல தமிழ் நடிகை பரபரப்பு புகார்!

சென்னை (28 மே 2021): முன்னள் அமைச்சருடன் கள்ள உறவில் இருந்ததாகவும், மூன்று முறை கருகலைப்பு செய்ததாகவும் தமிழ் நடிகை ஷாந்தினி பரபரப்பு புகார் அளித்துள்ளார். சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நாடோடிகள் படத்தில் நடித்தவர் நடிகை சாந்தினி. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் மணிகண்டன் தன்னை காதலிப்பதாக கூறி 5 வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும்,…

மேலும்...

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (22 மே 2021): , தமிழகத்தில் 24 ஆம் தேதி முதல் ஒருவாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நாட்டிலேயே தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால், மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க…

மேலும்...

எங்களை ஏன் அழைக்க வேண்டும்? – பிரதமர் மோடி மீது மம்தா காட்டம்!

கொல்கத்தா (20 மே 2021): பிரதமர் மோடி இன்று (20.05.2021) கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகள் மற்றும் கள அதிகாரிகளோடு காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார். இந்தநிலையில் பிரதமருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மம்தா, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆலோசனை கூட்டத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லையென குற்றஞ்சாட்டிய மம்தா, இது ஒரு வழி தகவல்…

மேலும்...

விஜயகாந்த் உடல் நிலை – தேமுதிக விளக்கம்!

சென்னை (19 மே 2021): மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என்று தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக, அதிகாலை 3:30 மணியளவில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடா்ந்து அவரது உடல்நிலையை மருத்துவா்கள் கண்காணித்து வருகின்றனர் இந்நிலையில், வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த்…

மேலும்...

கொரோனா தொற்றில் இந்திய அளவில் முதலிடத்தில் இருக்கும் தமிழகம்!

சென்னை(19 மே 2021): இந்தியாவில் கொரோனா 2-வது அலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில்தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, 10 மாநிலங்களில் 74% புதிய பாதிப்புகள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33,059 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் நேற்று 31,337 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

மருத்துவமனைகளில் கொரோனா படுக்கை இருப்பு குறித்து அறிந்துகொள்ளும் அரசு இணையதளம்!

சென்னை (18 மே 2021): இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் தமிழகத்திலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு எந்தெந்த மருத்துவமனைகளில் படுக்கை இருக்கைகள் உள்ளன ? என்பதை அறிந்து கொள்ளவும், படுக்கைகளை அந்தந்த பகுதிகளில் முன்பதிவு செய்து கொள்ளவும் வசதிக்காக இணையதளம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முகவரி  http://ucc.uhcitp.in/ இதில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளை பூர்த்தி செய்து படுக்கைகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.

மேலும்...

கொரோனா தடுப்பூசி தமிழகத்திலேயே தயாரிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னை (18 மே 2021): தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் முயற்சியிலும் தமிழக அரசு முழு மூச்சாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆக்சிஜன், தடுப்பூசி மருந்து உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க தமிழகத்தில் தடுப்பூசி மருந்து உற்பத்தி நிலையங்களை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன்…

மேலும்...

நெதர்லாந்திலிருந்து தமிழகத்திற்கு வந்தது ஆக்சிஜன்!

சென்னை (17 மே 2021): இந்தியாவில் உள்ள மருந்து நிறுவனங்களில் இருந்து தடுப்பூசி கிடைப்பது தாமதம் ஆகும் என்பதால் முன்கூட்டியே தமிழக மக்களுக்கு போடுவதற்காக உலக மருந்து நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார். அதன்படி 5 கோடி டோஸ் மருந்துகளை வாங்க உலகளாவிய டெண்டர் விட மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி மருந்துகளை வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஜூன் 5-ந்தேதி டெண்டர் திறக்கப்பட்டு உரிய நிறுவனங்களிடம் இருந்து தடுப்பூசி மருந்து கொள்முதல் செய்யப்படும்….

மேலும்...