ராகுல் காந்தி, ஸ்டாலினுக்கு கொரோனா பரிசோதனை?

சேலம் (29 மார்ச் 2021): நேற்று ராகுல் காந்தி, ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் நிர்வாகிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்ற அனைத்து தலைவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம் என தெரிகிறது. சேலத்தில் நடந்த திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அணைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெய்பிரகாஷும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு தற்போது கொரோனா…

மேலும்...

நீக்கப்பட்ட பிரதமர் மோடி – பாஜகவில் பரபரப்பு!

சென்னை (28 மார்ச் 2021): தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலைக்கு அஞ்சி, பாஜக வேட்பாளர்களின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் மோடியின் பெயர் தொடர்ந்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே எழுதப்பட்ட மோடியின் பெயர் ஒயிட்வாஷ் மூலம் அழிக்கப்படுகின்றன.. அதிமுக மட்டுமல்லாமல் பாஜக வேட்பாளர்களும் மோடியை தவிர்க்கின்றனர். அதற்கு பதிலாக ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்துகின்றனர்….

மேலும்...

முதல்வர் குறித்து பேசியது என்ன? – ஆ.ராசா பரபரப்பு விளக்கம்!

சென்னை (28 மார்ச் 2021): ‘ஸ்டாலினையும், இ.பி.எஸ்.,சையும் குழந்தைகளாக உருவகப்படுத்தி, நான் பேசியதை வேண்டுமென்றே சிலர் விரசமாக சித்தரித்து பரப்பி வருகின்றனர். என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விளக்கம் அளித்துள்ளார். பெரம்பலூரில் பத்தரிக்கையாளர்கள் மத்தியில் கூறியதாவது: “ஸ்டாலின், கட்சியில் படிப்படியாக வளர்ந்து, தலைவராக வந்தார். அதனால் அவர் பரிணாம வளர்ச்சி பெற்ற முழுமையான குழந்தை என்று சொன்னேன்.ஆனால், இ.பி.எஸ்., நேர்வழியில், மக்கள் தீர்ப்பால் முதல்வராக வரவில்லை. வேறு விதமாக, சசிகலாவின் காலைத்தொட்டு, குறுக்கு வழியில் வந்தார்….

மேலும்...

மோடி எடப்பாடி குறித்த சர்ச்சை பேச்சு – ஆ.ராசா மீது வழக்கு பதிவு!

சென்னை (28 மார்ச் 2021): திமுக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், “அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி குறைப்பிரசவ குழந்தை. அந்தக் குறைப்பிரசவ குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர்…

மேலும்...

எடப்பாடி பழனிச்சாமி நீண்ட காலம் வாழ வேண்டும் – ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை (28 மார்ச் 2021): எடப்பாடி பழனிச்சாமி நீண்ட காலம் வாழ்ந்து தி.மு.க. ஆளுகின்ற காட்சியை பார்க்க வேண்டும்” எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இன்று (28-03-2021), ஸ்டாலின் தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, காங்கேயத்தில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, “தி.மு.க.வை அழிக்க இதுவரை ஒருவர் பிறக்கவுமில்லை; இனியும் பிறக்கப் போவதில்லை. தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் இதுவரை அழிந்து போயிருக்கிறார்கள்; தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தில்…

மேலும்...

ஆ.ராசாவுக்கு ஸ்டாலின் குட்டு!

சென்னை (27 மார்ச் 2021): தி.மு.க.வினர் சொற்களை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கண்ணியக் குறைவை தலைமை ஏற்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின்போது ஆ.ராசா முதல்வர் குறித்து பேசிய பேச்சு அடங்கிய காணொலி, பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து பெரம்பலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆ.ராசா முதலமைச்சர் பழனிசாமியை நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை முதல்வர் குறித்து நான் பேசியது வெட்டி ஒட்டி…

மேலும்...

ஜவாஹிருல்லாவுக்கு ஆதரவாக தமிமுன் அன்சாரி தேர்தல் பிரச்சாரம்!

நாகை (27 மார்ச் 2021): திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பிரச்சாரம் மேற்கொள்கிறார். சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தமிமுன் அன்சாரி தி.மு.க. தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாகப்பட்டினத்தில் நேற்று பிரசாரத்தை தொடங்கினார். சிதம்பரம், காட்டு மன்னார்குடி, பன்ருட்டி ஆகிய இடங்களில் இன்று வாக்கு சேகரிக்கிறார். நாளை (28-ந் தேதி) மற்றும்…

மேலும்...

திமுக நிர்வாகிகள் மீது கனிமொழி திடீர் பாய்ச்சல்!

சென்னை (27 மார்ச் 2021): திமுகவினரின் சர்ச்சையான பேச்சுக்கு கனிமொழி எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், “அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ குழந்தை. அந்தக் குறைப்பிரசவ குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ஒரு டாக்டர்…

மேலும்...

இந்தியாவில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (26 மார்ச் 2021): இந்தியாவில் கட்டுக்குள் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. , மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,18,46,652 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 257 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை…

மேலும்...

ஆதார் மூலம் தொலைபேசி எண்னை எடுத்து வாக்காளர்களிடம் முறைகேடு செய்யும் பாஜக!

புதுச்சேரி (25 மார்ச் 2021): ஆதார் மூலம் தொலைபேசி எண்னை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட பாஜகவினர் மீது நிதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் ஆனந்த், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயர், முகவரி மட்டுமே இருக்கும். அதில் செல்போன் எண் இருக்காது. ஆனால், ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று, ‘வாட்ஸ்அப் குழுக்கள்’…

மேலும்...