ஸ்டாலின் ராகுல் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் கொரோனாவால் மரணம்!

சேலம் (02 ஏப் 2021): சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெயபிரகாஷ் கொரானா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த 4 நாட்களாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். முன்னதாக சேலத்தில் கடந்த வாரம் திமுக தலைவர் ஸ்டாலின், ராகுல் காந்தி, மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் ஜெயபிரகாஷும்…

மேலும்...

ஆ.ராசாவுக்கு தடை!

சென்னை (01 ஏப் 2021): சட்டப்பேரவை தேர்தலில் 2 நாட்கள் பிரசாரம் செய்ய ஆ.ராசாவுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மேலும் திமுக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து ஆ.ராசாவின் பெயரையும் நீக்கி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், பெண்களை அவமதிக்கும் வகையில் இனி எதிர்காலத்தில் பேசக்கூடாது என்றும், முதலமைச்சர் பழனிசாமி குறித்த விமர்சனத்துக்கு ஆ.ராசா அளித்த விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றும் இந்திய தலைமை…

மேலும்...

நமீதாவே தேவலாம் – கொந்தளிக்கும் பாஜகவினர்!

சென்னை (31 மார்ச் 2021): பாஜகவிற்கு ஆதரவாக ராதாரவி பேசுவது பாஜகவுக்கு பெரிய பாதிப்பு என கூறப்படுகிறது. நேற்று ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளர் குஷ்புக்காக ராதாரவி பேசும்போது, “என் குடும்பமே வில்லன் குடும்பம்.. என் அப்பாவுக்கு 20 பொண்டாட்டிங்க.. ஆனாலும் அவர் யாரையுமே தெருவில் விடவிலை.. இதுவே கமலை எடுத்துக்குங்க.. நம்பி வந்த 3 பொண்ணுங்களையும் காப்பாத்தினாரா? அவர் ஒரு கிறிஸ்தவர்..” என்றும், “கமலிடம் இருப்பது கிறிஸ்துவ பணம்… நீ இதுவரை எத்தனை தயாரிப்பாளர்களை நடக்கவிட்டிருப்பே…..

மேலும்...

இப்படி பேசிடுச்சே அந்த பொண்ணு – சீறிய கமல்!

சென்னை (31 மார்ச் 2021): விஐபி தொகுதியாக பார்க்கப்படுவதில் மிக முக்கியமானது கோவை தெற்கு தொகுதி.. தேர்தலின் ஆரம்பத்தில் இருந்தே ஸ்டிராங் வேட்பாளர்களால், கணிப்பில் ரொம்ப குழப்பத்தை தந்து வரும் தொகுதி இது.. பிரச்சாரத்தின் துவக்கத்தில் இருந்தே அரசியல் களை கட்டி வரும் தொகுதி இது.. இதுவரை வந்த இத்தனை கருத்து கணிப்புகளில், இங்கு யாருக்கு வெற்றி என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியவில்லை.. அந்த அளவுக்கு வானதி & கமல் இரு ஜாம்பவான்கள் டஃப் தந்து…

மேலும்...

ஆ.ராசா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை?

சென்னை (31 மார்ச் 2021): திமுக எம்.பி ஆ.ராசா முதல்வர் எடப்பாடி குறித்து பேசிய நிலையில் அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. தனிமனித விமர்சனம் என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் இது தொடர்பான அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையத்திற்குத் தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு அனுப்பியிருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக ஆ ராசாவுக்கு தேர்தல் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கத்தை இன்று மாலை 6…

மேலும்...

ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி – அதிமுக மீது ராமதாஸ் அதிருப்தி!

சென்னை (30 மார்ச் 2021): வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு தற்காலிகமானது என ஓபிஎஸ் அளித்துள்ள பேட்டி பாமகவினரை அதிருப்தி அடைய வைத்துள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின் படி மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 20 சதவீதம் இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு வழங்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இதில், சீர்மரபினர் பிரிவில் 68 உட்பிரிவுகள் உள்ளன. மிக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில்…

மேலும்...

அதிமுக நிர்வாகிகள் திடீர் நீக்கம்!

சென்னை (30 மார்ச் 2021): கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு எதிராக செயல்படுவதாக, அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கட்சியின் தலைமைக்கழகம் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஒ.பன்னீர் செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும்,…

மேலும்...

ஊரடங்கு அறிவிப்பு வெளியாகுமா? – சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!

சென்னை (30 மார்ச் 2021): ஊரடங்கு அறிவிப்பு வெளியாகலாம் என்று பரவும் தகவல் குறித்து காதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. சூழலை கண்காணித்து சூழலுக்கு ஏற்றபடி முடிவு எடுக்கப்படும். வரக்கூடிய நாட்களில் சில கட்டுபாடுகள் இருக்கும். முழு ஊரடங்கு வரப்போகிறது, இரவு நேர ஊரடங்கு வரப்போகிறது என்கிற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.” என கூறினார்.

மேலும்...

திமுகவுக்கு வாக்கு சேகரித்த காடுவெட்டி குருவின் மகளிடம் பாமகவினர் வாக்குவாதம்!

அரக்கோணம் (29 மார்ச் 2021): அரக்கோணம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகையை பாமகவினர் சிலர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரச்சாரத்தை நிறுத்தி பலத்த காவல்துறை பாதுகாப்புடன் திரும்பிச் சென்றார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் இன்பசேகரன் பென்னாகரம் தொகுதியில் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இன்று அவர் சின்னகொல்லப்பட்டி, பெரியகொல்லப்பட்டி, சோமனஅள்ளி, பூதிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். மேல்கொல்லபட்டி கிராமத்தில்…

மேலும்...

முதல்வர் மீதான பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆ.ராசா!

சென்னை (29 மார்ச் 2021): முதல்வர் எடப்பாடி மீதான பேச்சுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மன்னிப்பு கோரியுள்ளார். ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப் பேசியவர் ஒருகட்டத்தில், “அரசியல் வளர்ச்சியில் மு.க. ஸ்டாலின், நல்ல உறவில் பிறந்த சுகப்பிரசவ குழந்தை; எடப்பாடி பழனிசாமி கள்ள உறவில் பிறந்த குறைப்பிரசவ…

மேலும்...