சசிகலா தலைமையில் மீண்டும் அதிமுக – பச்சை கொடி காட்டும் ஓபிஎஸ்!

சென்னை (24 மார்ச் 2021): தேர்தலுக்குப் பிறகு சசிகலா தலைமையில் அதிமுக இயங்க வாய்ப்பு உள்ளதாக நடக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் சசிகலாவை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளும் எண்ணமே இல்லை என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்திருந்தார். ஆனால் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்தால் கட்சியில் இணைக்கப்படுவாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த ஓ.பி.எஸ்., “என்னை பொருத்தவரையில், மனிதாபிமானம் அடிப்படையில் பார்த்தால் அவர் நான்கு ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டார். ஒரு தனிப்பட்ட நபருக்காகவோ,…

மேலும்...

பிரிக்கப்போவது அமமுக – ஜெயிக்கப்போவது திமுக!

சென்னை (24 மார்ச் 2021): தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் இறுதி கட்டப் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். திமுக, அதிமுக என இரு பிரதான கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அமமுக தலைமையிலும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையிலும் கூட்டணி அமைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சீமானும் அனைத்து தொகுதியிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார். பல முனை தாக்குதல் நடத்தப்படுவதால் யாருக்கு…

மேலும்...

தமிழக எம்.பி முஹம்மது ஜான் மாரடைப்பால் மரணம்!

சென்னை (23 மார்ச் 2021): அதிமுக மாநிலங்களவை எம்.பி முஹம்மது ஜான் மாரடைப்பால் காலமானார். சட்டமன்றதேர்தலையொட்டி வாலாஜா அருகே பிரசாரத்தில் ஈடுபட வந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது ஜானின் உயிர் பிரிந்தது. முகமது ஜான்.2019 ஆம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைக்கு முகமது ஜான் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. .

மேலும்...

சசிகலா மீது திடீர் பாசமழை பொழியும் ஓபிஎஸ்!

சென்னை (23 மார்ச் 2021): சசிகலா மீது திடீரென பாசமழை பொழிந்துள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். விருப்பமில்லையென்றபோதிலும் வேறு வழியின்றி எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளாராக முன்மொழிந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு ஆரம்பம் முதலே இருந்த வந்த நிலையில், எடப்பாடி தன்னை மட்டும் முன்னிலைப்படுத்துவதை ஓபிஎஸ் விரும்பவில்லை. அதன் பின்னணியிலேயே, தனக்கென விளம்பரங்களை கொடுக்கும் ஓபிஎஸ், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார். அதில் சசிகலா மீது ஆரம்பம் முதலே தனக்கு வருத்தம்…

மேலும்...

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா!

சென்னை (23 மார்ச் 2021): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், 4 வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று (மார்ச்.,22) 1385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 8.47 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.சென்னை,கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவள்ளூர் பகுதியில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 659 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 47 ஆயிரத்து 139 ஆக உள்ளது.இன்று மட்டும் கொரோனா…

மேலும்...

தேர்தல் பிரச்சாரத்தின்போது கட்சி மாறிய வேட்பாளர் – காமெடி பீசான கமல்!

திருச்சி (23 மார்ச் 2021): திருச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நேரத்தில் மக்கள் நீதி மய்ய கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் திமுகவுக்கு மாறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ம.நீ.ம மற்றும் அதன் கூட்டணியில் உள்ள சமக, ஐ.ஜே.கே கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கமல் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்ய கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்…

மேலும்...

பாஜக கூட்டணியாலத்தான் தோற்கப்போறோம் – கண்ணீர் விடும் அதிமுகவினர்!

சென்னை (22 மார்ச் 2021): தமிழகத்தில் பாஜகவில் சிக்கித் தவிப்பதால்தான் தோல்வியை சந்திக்கபோவதாக அதிமுகவினர் குமுறுகின்றனர். பாஜக அரசின் இந்தி திணிப்புகள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, சிலிண்டர் விலை உயர்வு, விவசாய சட்டம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர். எனவே உறுதியாக பாஜகவுடன் சேர்ந்து அதிமுகவும் தோல்வியை சந்திக்கும் என்கின்றனர் திமுகவினர். மேலும் அதிமுக கூட்டணியில் பாமக, தமாகா என பல கட்சிகள் இருந்தாலும், பாஜக மட்டும் மிரட்டி கொண்டிருக்கிறது.. பாஜக…

மேலும்...

குஷ்பூவுக்கு எதிராக திமுக புதுவித பிரச்சாரம்!

சென்னை (22 மார்ச் 2021): தமிழகத்தில் தேத்தல் களம் கலைக்கட்டியுள்ள நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பூவுக்கு எதிராக பலவிதமான வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து குஷ்பூ தெரிவிக்கையில் “என்னை வெளிமாநிலத்தை சேர்ந்தவள் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். நான் வெளிமாநிலத்தை சேர்ந்தவள்தான், ஆனால் இந்தியாவில் பிறந்தவள் ‘இந்திய பிரஜை’. 35 ஆண்டுகளாக சென்னையில் வாழ்கிறேன், தமிழ் மண் மீது எனக்கும் உரிமை உண்டு என தெரிவித்தார். அப்போது பாஜக மாநில வழக்கறிஞகள் பிரிவு…

மேலும்...

ஒரே நிறுவனத்தில் 40 பேரை துவம்சம் செய்யும் கொரோனா!

சென்னை (22 மார்ச் 2021): சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சென்னை கந்தன்சாவடி, தரமணி, பெருங்குடி ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வரக்கூடிய தனியார் நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய நபர்களில் 2 பேருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்னதாக தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் அந்த நிறுவனத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் பரிசோதனையின் முடிவில் 40…

மேலும்...

கொரோனா பரவலால் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடையா? – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

சென்னை (22 மார்ச் 2021): கொரோனா பரவல் காரணமாக அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. , தேர்தல் பிரச்சாரங்களின் போது முக கவசம் அணிவது, தனி மனித விலகலை அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஜலாவுதீன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது….

மேலும்...