Supreme court of India

என்.வி.ரமணா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம்!

புதுடெல்லி (06 ஏப் 2021): உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி என்.வி.ரமணாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். அவர் இந்த மாதம் 24 ஆம் தேதி பதவியேற்பார். மே 23 அன்று ஓய்வு பெறும் தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணாவை பரிந்துரைத்திருந்தார். என்.வி.ரமணன் ஆகஸ்ட் 27, 1957 அன்று ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் பொன்னவரம் கிராமத்தில் பிறந்தார். ஏப்ரல் 27, 2000 அன்று ஆந்திர மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக முதலில் நியமிக்கப்பட்டார். மே 10,…

மேலும்...

தமிழகத்தில் ஒரேநாளில் 3,672 பேருக்கு கொரோனா தொற்று!

சென்னை (05 ஏப் 2021): தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வந்தநிலையில் தற்போது தமிழத்தில் கடந்த சில நாட்களாக தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 3,672 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9,03,479 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 பேர் கொரோனா பாதிப்பால்…

மேலும்...

சாலையில் அனாதையாய் கிடந்த ரூ 11 லட்சம்!

சிதம்பரம் (05 ஏப் 2021): நாளை செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுக்க தேர்தல் பிரச்சாரம் நேற்று நிறைவடைந்தது. இந்நிலையில் சிதம்பரம் தனி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமையிலான பறக்கும் படையினர் குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட எஸ்.புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வாழை தோட்டம் அருகே இளைஞர்கள் சிலர் நின்றிருந்தனர். பறக்கும் படை அதிகாரிகள் வாகனத்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய உடனே அவர்கள் தப்பி…

மேலும்...

சினிமாவிலிருந்து விலகல் – கமல் பகீர் தகவல்!

கோவை (04 ஏப் 2021): அரசியலுக்கு இடையூறு ஏற்பட்டால் சினிமாவிலிருந்து விலகிவிடுவேன் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கோவையில் இதுகுறித்து அவர் கூறியதாவது:- கோவை தொகுதி மக்கள் தெளிவான எண்ணத்தோடு இருக்கிறார்கள். குறிப்பாக இங்குள்ள ஏழை மக்களிடம் தங்களுக்கு பாதுகாப்பு முக்கியம் என்ற உணர்வு அதிகமாக இருக்கிறது. நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை அரசியலுக்கு செலவிட விரும்புகிறேன். அதே நேரத்தில் அரசியலுக்கு, சினிமா இடையூறாக இருந்தால் அந்த சினிமாவையே நான் விட்டுவிடுவேன்….

மேலும்...

கோவிட் தன்னார்வப் பணியாளர்களுக்கு கவுரவம் – நினைவு மலர் வெளியீட்டு விழா!

ரியாத் (03 ஏப் 2021): சவூதி அரேபியாவில் கடந்த ஆண்டு கோவிட்-19 நோய் தொற்று காலத்தில் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்காகவும், சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களுக்காகவும் தொண்டாற்றிய எண்ணற்ற சமூக பணி ஊழியர்கள், அரசு பணியாளர்கள், மருத்துவர்கள் என அனைவரையும் கெளரவிக்கும் வகையில் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம், சவுதி அரேபியா சார்பாக “The Distance” நூல் வெளியீட்டு விழா கடந்த 28 மார்ச் 2021 அன்று ரியாத்திலுள்ள இந்திய தூதரக வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய தூதரகத்தின்…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பரவல் – தலைமை செயலாளர் பரபரப்பு அறிக்கை!

சென்னை (03 ஏப் 2021): கொரோனா நோய் தொற்று பரவலை கண்காணித்து தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்று தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார். “இந்தியா முழுவதும் 11 மாநிலங்களில் கொரோனாநோய்த் தொற்று அதிகரித்துவரும் சூழல் காணப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்ட்ரா மாநிலத்தில் இந்த தொற்று அதிவேகமாகவும், பன்மடங்கும் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டும், அதேவேளையில் பஞ்சாப், கர்நாடகா, சதிஷ்கர், குஜராத், மத்தியப் பிரதேசம், அஸ்ஸாம், டெல்லி மற்றும் தமிழ்நாட்டிலும் நாள் ஒன்றுக்கு நோய்த் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை…

மேலும்...

திமுக எம்பி கனிமொழி மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (03 ஏப் 2021): திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டு இருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கனிமொழி, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

மேலும்...

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா பாசிட்டிவ்!

சென்னை (03 ஏப் 2021): திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி ஈடுபட்டு இருந்த நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து கனிமொழி, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் சமூகத்தில் அனைத்து தரப்பினரும்…

மேலும்...

எம்பி நவாஸ்கனி மற்றும் மமகவினர் மீது பாஜகவினர் கொலைவெறி தாக்குதல் – மனமேல்குடியில் போலீஸ் குவிப்பு!

அரந்தாங்கி (02 ஏப் 2021): ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி மற்றும் மமகவினர் மீது பாஜகவினர் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுக்கா, கோட்டைப்பட்டினம் அருகில் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பதற்காக, ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி.M.P அவர்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்கள். அம்மாபட்டினம் பகுதியில் வாக்கு சேகரித்து விட்டு, கோட்டைப்பட்டினத்திற்கு வாக்கு சேகரிப்பதற்காக வந்து கொண்டிருக்கும் வேளையில் இடையில் உள்ள…

மேலும்...

ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு!

சென்னை (02 ஏப் 2021): சென்னை நீலாங்கரையில் ஸ்டாலின் மகள் செந்தாமரை விட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சபரீசன் வீட்டில் நடைபெறக்கூடிய வருமான வரி சோதனை சோதனையை முன்னிட்டு வீட்டில் இருக்கக்கூடிய யாரும் வெளியே உள்ளவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு வருமானவரித் துறையினர் தடை விதித்துள்ளனர். அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 4 பகுதிகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே…

மேலும்...