பொங்கல் பரிசு டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம்!

சென்னை (26 டிச 2022): பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியினை ஜனவரி 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அதைதொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பொது மக்களுக்கு வழங்க உள்ளனர். இதற்கிடையில், பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே வரும் 27ம் தேதி முதல் 28ம் தேதி வரை பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் யாராவது ஒருவரின் கைரேகைப் பதிவு செய்தால்…

மேலும்...

சுந்தர் பிச்சை கூகுளில் தலைமை பொறுப்பில் இருந்திருக்க முடியாது – கமல்ஹாசன் அதிரடி!

சென்னை (25 டிச 2022): சுந்தர் பிச்சை கூகுள் தலைமை பொறுப்பையே ஏற்றிருக்க முடியாது என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கேரளா எம்.பி ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்றத்தில் ஹிந்தியை பயிற்றுமொழியாக்கும் திட்டத்திற்கு எதிராக பேசிய விடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தமிழில் பதிவிட்டுள்ளார். அதில், ஹிந்தியை திணிக்கும் உங்களின் கேவலமான வடிவமைப்பு இந்த நாட்டை சீரழித்துவிடும். ஐஐடியில் ஹிந்தியில் தேர்வு எழுத வேண்டும் என்றால், கூகுளின் தலைமை பொறுப்பில் சுந்தர் பிச்சை இருந்திருக்க முடியுமா என்று கேள்வி…

மேலும்...
Durai Murugan

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (25 டிச 2022): தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரை முருகனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று பிற்பகல் 1:30க்கு துரை முருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை (25 டிச 2022): தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (25ஆம் தேதி) காலையில் இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிறகு மேலும் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை…

மேலும்...

ரூ 1000 பத்தாது ரூ 5000 வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிச்சாமி!

சென்னை (23 டிச 2022): பொங்கல் பரிசு ரூ 5000 வழங்க வேண்டும் என்று எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 பரிசுத் தொகை மற்றும் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் “தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்காதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், பொங்கல் பரிசு தொகையை ரூ.5,000 ஆக…

மேலும்...

கொரோனா குறித்து தேவையற்ற அச்சத்தை பரப்ப வேண்டாம் – இந்திய மருத்துவ சங்கம் கோரிக்கை!

புதுடெல்லி (22 டிச 2022): கோவிட் குறித்து தேவையற்ற அச்சத்தை பரப்ப வேண்டாம் என இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. கோவிட் பற்றி தேவையற்ற அச்சம் இருப்பது நல்லதல்ல, ஏனெனில் இது உலகின் பல்வேறு பகுதிகளில் நீண்டகால நோயாக இருக்கும் என்று இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் பல நோய்களைப் போலவே கோவிட் பரிசோதனைகள் பரவலாக நடத்தப்பட வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள், நோய் அறிகுறி உள்ளவர்கள், அந்நியர்களுடன் நீண்ட நேரம் பேசுபவர்கள் ஆகியோர் முகமூடிகளை அணிய…

மேலும்...

திமுக எம்.பி ஆ. ராசாவின் சொத்துக்கள் அமலாக்கத்துறை முடக்கம்!

சென்னை (22 டிச 2022): திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் ரூ.55 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கோவையில் உள்ள ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் லஞ்ச பணத்தில் வாங்கப்பட்ட சொத்து என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 2004-2007 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் வாங்கிய லஞ்ச பணத்தில் பினாமி பெயரில் நிலத்தை வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த…

மேலும்...

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னை (22 டிச 2022): 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 2023ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட,அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 பணத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச்…

மேலும்...

வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழக விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை – முதல்வர் கூட்டத்தில் ஆலோசனை!

சென்னை (22 டிச 2022): கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அவசர ஆலோசனை நடைபெற்றது. உலகளவில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை, தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மேலும்...

திமுக முன்னாள் எம்.பி. மஸ்தான் திடீர் மரணம்!

சென்னை (22 டிச 2022): தி.மு.க சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான் இன்று (டிசம்பர் 22) காலை மாரடைப்பால் மரணமடைந்தார். தி.மு.க சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் டாக்டர் மஸ்தான். முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டாக்டர் மஸ்தான் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவராக இருந்து வந்தார். இந்தநிலையில், இன்று காலை சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, டாக்டர் மஸ்தானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில்…

மேலும்...