கோவை ஈஷா மையத்திற்கு சென்ற மனைவியை காணவில்லை – கணவன் புகார்!

கோவை (20 டிச 2022): கோவை ஈஷா மையத்திற்கு சென்ற மனைவியைக் காணவில்லை என்று கணவர் புகார் அளித்துள்ளார். கோயம்­புத்தூர் – செம்­மேடு, வெள்­ளி­யங்­கிரி மலை அடி­வா­ரத்தில் ஈஷா யோகா மையம் உள்­ளது. 150 ஏக்கர் நிலப்­ப­ரப்பில் விரிந்­துள்ள இந்த மைய­மா­னது, உள்­நிலை மாற்­றத்­திற்­கான சக்தி வாய்ந்த இடம் என்று பிரச்சாரம் செய்யப் ­ப­டு­கி­றது. இங்கு தியா­ன­லிங்கத் திருக்­கோவில், ஸ்பந்தா ஹால், ஈஷா புத்­து­ணர்வு மையம், ஈஷா இல்லப் பள்ளி மற்றும் ஈஷா குடி­யி­ருப்­புக்கள் உள்­ளன. ஈஷா…

மேலும்...

அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை (20 டிச 2022): தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்பதால் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21 மற்றும் 22ஆம் தேதிகளில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை…

மேலும்...

தெலுங்கானா காங்கிரஸில் 13 மூத்த தலைவர்கள் ராஜினாமா!

ஐதராபாத் (19 டிச 2022): தெலுங்கானா மாநில காங்கிரசில் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டியின் 13 தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், மற்றவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்படுவதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ராஜினாமா செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏ தனாசாரி அனுசுயா, முன்னாள் எம்எல்ஏ வேம் நரேந்திர ரெட்டி ஆகியோர் ராஜினாமா செய்தவர்களில் அடங்குவர். ராஜினாமா கடிதத்தில், முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மாநிலத்தில் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருவதாக தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்….

மேலும்...

கிறிஸ்துமஸ் தினத்தன்று ராகுல் காந்தியுடன் இணையும் கமல் ஹாசன்!

சென்னை (19 டிச 2022): கிறிஸ்துமஸ் தினத்தன்று பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் கைகோர்க்கிறார் கமல்ஹாசன். இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறுகையில், “ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தேசிய தலைநகரில் டிசம்பர் 24-ம் தேதி நடைபெறும் பாதயாத்திரையில் ராகுல் காந்தியுடன் எம்என்எம் தொண்டர்களும் கலந்து கொள்வார்கள் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்தார். ஏற்கனவே பாரத் ஜோடோ யாத்ராவில் ஸ்வரா பாஸ்கர் உட்பட…

மேலும்...

தமிழக காவல்துறைக்கு ஜவாஹிருல்லா பாராட்டு!

சென்னை (18 டிச 2022): தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 வாயிலாக ஐந்து நாட்களில் தமிழக காவல்துறை முன்னெடுத்திருக்கும் செயல்பாடுகள் பாராட்டுதலுக்குறியது என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக அதிரடி நடவடிக்கை கஞ்சா வேட்டை 3.0…

மேலும்...

வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்ட அண்ணாமலை – விடாது துரத்தும் செந்தில்பாலாஜி!

சென்னை (18 டிச 2022): தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் பல லட்சம் மதிப்புடைய ரபேல் வாட்ச் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், அண்ணாமலைக்கும் ட்விட்டரில் வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. அண்ணாமலையை செந்தில் பாலாஜி கேள்விகள் மூலம் துளைத்து வருகிறார். இந்நிலையில் சொத்துக் கணக்குகள் அனைத்தையும் காட்டுகிறேன் என்பதாக அண்ணாமலை இட்டுள்ள பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பதிவி கூறியிருப்பதாவது: சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என…

மேலும்...

இளம் பெண்ணிடம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்துகொண்ட கோயில் குருக்கள்!

இளம்பெண்ணிடம் வீடியோ காலில் அந்தரங்க பாகத்தைக் காட்டிய கோயில் குருக்களை, அவரது கணவர் லெஃப்ட் ரைட் வாங்கும் வீடியோ காட்சி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோயில் குருக்கள் ஒருவர் முகம் தெரியாத இளம்பெண்ணுக்குத் தவறான நோக்கத்துடன் வீடியோ கால் செய்துள்ளார். ஆனால் விபரம் தெரியாமல் அந்த பெண் அந்த குருக்களின் காலை எடுத்துள்ளார். அந்த சமயம் அந்த பெண்ணிடம் தகாத முறையில் வீடியோ காலில் செயல்பட்டுள்ளார் அந்த குருக்கள். அதுமட்டுமல்லாமல் ஆபாச படங்களையும் அந்த பெண்ணின்…

மேலும்...

ஆடு வளர்த்து 5 லட்சத்துக்கு கடிகாரம் வாங்கியது எப்படி? அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கேள்வி!

சென்னை (18 டிச 2022): ரபேல் வாட்ச் வாங்கியதற்கான ரசீதை வெளியிட முடியுமா? என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பான அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்பவர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள்…

மேலும்...

பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு!

சென்னை (17 டிச 2022): பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிப்பது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த தேர்வுகள் வரும் டிசம்பர் 23ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படுவது குறித்த அறிவிப்பை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும்…

மேலும்...

ஆவின் விலை மீண்டும் உயர்வு – பால் முகவர்கள் கண்டனம்!

சென்னை (16 டிச 2022): ஆவின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதற்கு பால் முகவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பால் முகவர்கள் சங்க தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கின்ற பாலுக்கான விலையை உற்பத்தியாளர்களான விவசாய பெருமக்களுக்கு லிட்டருக்கு 3.00ரூபாய் உயர்த்தி வழங்கிய காரணத்தால் கடந்த நவம்பர் 5ம் தேதி முதல் ஆவின் நிறைகொழுப்பு (ஆரஞ்சு நிற பாக்கெட்) பால் விற்பனை விலையை மட்டும் லிட்டருக்கு 12.00ரூபாய்…

மேலும்...