அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை!

 அமெரிக்க  ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை உடனே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் மொத்தம் 50 மாநிலங்கள் உள்ளன. மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் சேர்த்து 538 தேர்வாளர்கள் உள்ளனர். இவர்களில் 270 தேர்வாளர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அதிபர் இருக்கையில் அமர முடியும். தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 209 வாக்குகளும், டிரம்ப் 118…

மேலும்...

பிரான்ஸ் வான்வழி தாக்குதலில் 50 பேர் பலி!

பாரிஸ் (03 நவ 2020): பிரான்ஸ் வான்வழி தாக்குதலில் 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது. ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் அரசுபடைகள் போராடி வரும் புர்கினா பாசோ மற்றும் நைஜரின் எல்லைகளுக்கு அருகிலுள்ள பகுதியில் ஒரு வான்வழி தாக்குதல் வெள்ளிக்கிழமை நடந்தது என்று பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி தெரிவித்தார். “அக்டோபர் 30 அன்று மாலியில், பார்கேன் படை 50 க்கும் மேற்பட்ட ஜிஹாதிகளை கொன்றது மற்றும் ஆயுதங்களையும் பொருட்களையும் பறிமுதல் செய்தது” என்று பிரெஞ்சு…

மேலும்...

பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த கத்தி குத்தில் 3 பேர் பலி!

பாரிஸ் (29 அக் 2020): பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்திற்குள் இன்று மதியம் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கு இருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளான். இந்த கொடூர கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். மேலும், இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

புருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்!

புருணை (28 அக் 2020): புருணை நாட்டு இளவரசர் அஜீம் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புருணை நாட்டு சுல்தானின் வாரிசு இளவரசர் அஜிம். இவருக்கு 38 வயதாகிறது. இவர் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் இப்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்நாட்டில் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த இளவரசர் பிரின்ஸ் புரொடக்சன்ஸ்…

மேலும்...

சாம்சங் நிறுவன சேர்மன் உயிரிழந்தார்!

ஸ்மார்ட் போன்களின் அரசன் என வர்ணிக்கப்படும் சாம்சங் நிறுவனத்தின் சேர்மன் லீ குன் ஹீ அவரது 78 வது வயதில் உயிரிழந்தார். உலக அளவில் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சிகள், எலக்ரானிக்ஸ் பொருள்களுக்கு மிகப் பெரிய வர்த்தகம் உள்ளது. அந்தப் பொருள்களின் தரத்தின் காரணமாகவே மக்களிடம் சாம்சாங்குக்கு அத்தனை மதிப்பு இருந்துவருகிறது. தந்தையின் இறப்புக்குப் பிறகு 1987-ம் ஆண்டு சாம்சங் நிறுவனத்தின் பொறுப்பை ஏற்றார் லீ குன் ஹீ. அதுவரையில் மேற்குலக நாடுகள், குறைந்த விலையில் தொலைக்காட்சியை…

மேலும்...

வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிப்பு – பின்னணி என்ன?

பாரீஸ் (17 அக் 2020): பிரான்சில் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொன்றுந்த்த ஆசிரியரின் தலையை மர்ம நபர் ஒருவர் துண்டித்துள்ளார். பிரான்சில் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் மக்ரோன் லெபனான் கண்டனம் தெரிவித்துள்ளார பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகில் உள்ள பள்ளியில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் முகமது நபியின் கேலிசித்திரங்கள் குறித்து பாடம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வகுப்பு அறையில் புகுந்த மர்மநபர் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியரின்…

மேலும்...

கொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அறிவிப்பு!

மாஸ்கோ (15 அக் 2020): கொரோனாவிற்கான அடுத்த தடுப்பூசியையும் தயார் செய்துள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் தடுப்பூசிகளை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி உலகிலேயே முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து விட்டதாக ரஷியா அதிபர் புதின் அதிரடியாக அறிவித்தார். ’ஸ்புட்னிக் 5’ என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி தற்போது ரஷியாவில்…

மேலும்...

இங்கிலாந்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா- மூன்றடுக்கு ஊரடங்கு உத்தரவு!

லண்டன் (14 அக் 2020): இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா அதிக அளவில் பரவி வருவதால் மூன்றடுக்கு ஊரடங்கிற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். இங்கிலாந்தின் வடக்கில் கொரோனா தொற்று பரவல் மிகவேகமாக பரவி வருகின்றது. வரவிருக்கும் வாரங்களில் இறப்புக்கள் அதிகரிக்கும் என்றும், கடந்த மாத தொடக்கத்திலிருந்து தொற்று பரவல் வேகம் அதிகரித்து வருகின்றது என்றும், துணை தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் ஜொனாதன் வான்-டாம் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய புள்ளிவிவரங்கள் இளையவர்களிடையே வைரஸ் விரைவாக…

மேலும்...

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை!

டாக்கா (13 அக் 2020): வங்க தேசத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மிகவும் கொடூரமானவையாக இருக்கின்றன.இந்த சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு சரியான தண்டனை கொடுத்தால் மட்டுமே இதற்கு எல்லாம் முடிவு வரும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில், தற்போது பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு வங்காள தேச அரசு…

மேலும்...

கொரோனா வைரஸ் – சீனாவின் அடுத்த அதிர்ச்சி!

பெய்ஜிங் (13 அக் 2020):கொரோனா வைரஸ் பரப்பும் எறும்பு தின்னியை சீனா மருந்தாக பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் படிப்படியாக சீனா முழுவதும் பரவி பின்னர் உலகம் முழுவதும் பரவிவிட்டது. கொரோனா வைரஸால் உலகமே மிகப்பெரிய அவதியில் தள்ளப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது. ஆனாலும், வௌவ்வால்கள், எறும்புத் தின்னிகளிடம் இயற்கையாகவே ஏராளமான கொரோனா வைரஸ்கள் இருக்கின்றன. இந்நிலையில், சீனாவில் பாரம்பரிய மருத்துவத்தில் எறும்புத் தின்னியின் செதில்களை…

மேலும்...