புருணை நாட்டு இளவரசர் அஜீம் திடீர் மரணம்!

Share this News:

புருணை (28 அக் 2020): புருணை நாட்டு இளவரசர் அஜீம் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புருணை நாட்டு சுல்தானின் வாரிசு இளவரசர் அஜிம். இவருக்கு 38 வயதாகிறது. இவர் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் இப்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்நாட்டில் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த இளவரசர் பிரின்ஸ் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அஜிம் யூ ஆர் நாட் யூ மற்றும் தி ஹேப்பி பிரின்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களை அவர் தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply