மலேசியாவின் அடுத்த பிரதமர் யார்? மலேசிய அரசியலில் பரபரப்பு!

கோலாலம்பூர் (25 பிப் 2020): மஹாதீர் முஹம்மதுவின் ராஜினாமாவை அடுத்து மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியே தற்போது ஓங்கி நிற்கிறது. மகாதீர் விலகியதையடுத்து, அன்வார் இப்ராகிம் தலைமையில் ஆட்சியமைக்க வழியுண்டா? என்று அவர் பிகேஆர் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார். மகாதீர் சார்ந்துள்ள பெர்சாத்து கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 26 எம்பிக்கள் உள்ளனர். பிகேஆர் கட்சியில் இருந்து 10 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஆதரவை இழந்துவிட்டதால், இயல்பாகவே அன்வார் தலைமையிலான நடப்பு பக்காத்தான் ஹராப்பான்…

மேலும்...

அதிர்ச்சி : மலேசிய பிரதமர் மகாதிர் முஹம்மது பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா!

கோலாலம்பூர் (24 பிப் 2020): மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது பிரதமர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார். 94 வயதான மகாதீர் முகம்மது, உலகின் அதிக வயதுடைய பிரதமர் என்ற பெயரையும் பெற்றவர். இந்நிலையில் இன்று அவரது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதற்கான கடிதத்தை மன்னரிடம் இன்று ஒப்படைக்கவுள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த மகாதீர் முகம்மதுவின் திடீர் ராஜினாமா உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் சார்ந்த பெர்சாத்து கட்சியின் தலைவர்…

மேலும்...

லண்டன் மசூதியில் பரபரப்பு – இமாம் மீது கத்தி குத்து- கைதானவனிடம் போலீஸ் தீவிர விசாரணை!

லண்டன் (23 பிப் 2020): லண்டன் மசூதியில் தொழுகை நடத்தும் இமாம் மீது கத்திக் குத்து தாக்குதல் நடத்தியவனை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய லண்டனில் 1944ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க மசூதி ஒன்று உள்ளது. அங்கு தொழுகைக்காகவும் சுற்றிப் பார்க்கவும் கூட்டம் வருவது வாடிக்கை. இந்நிலையில் தொழுகையை வழிநடத்தும் இமாம் மீது ஒருவன் கத்தியால் குத்தியுள்ளான். இமாமுக்கு வயது 70. சம்பவம் நடந்த நேரத்தில் பள்ளிவாசலில் கிட்டத்தட்ட 100 பேர் இருந்ததாக…

மேலும்...

ஜெர்மனியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலி!

ஜெர்மனி (20 பிப் 2020): ஜெர்மனியின் ஹனாவ் நகரில் இரு வேறு இடங்களில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். தென்மேற்கு ஜெர்மனியின் ஹனாவ் நகரில் புதன்கிழமை பிற்பகல் 2 பார்களில் மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக நடந்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் தாக்குதல் நடந்த இடத்தில் இரவு 10 மணியளவில் இருண்டான பகுதியில் வாகனம் காணப்பட்டதாகவும், இரண்டாவது…

மேலும்...

கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியது!

பீஜிங் (19 பிப் 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. இந்நிலையில், சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின்…

மேலும்...

இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து சர்வதேச சமூகம் தலையிட இம்ரான் கான் கோரிக்கை!

இஸ்லாமாபாத் (18 பிப் 2020): இந்தியாவின் தற்போதைய நிலை குறித்து சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பாகிஸ்தான் 40 ஆண்டுகளாக அடைக்கலம் அளித்து வருவது தொடா்பான 2 நாள் சா்வதேச மாநாடு, இஸ்லாமாபாதில் திங்கள்கிழமை தொடங்கியது. இதில், ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் பங்கேற்றுள்ளாா். அவா் முன்னிலையில், பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் பேசியதாவது: இந்தியாவின் தற்போதைய கொள்கைகளால், அங்கிருந்து முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு இடம்பெயர…

மேலும்...

இது இந்தியாவல்ல பாகிஸ்தான் – பாகிஸ்தான் நீதிமன்றம் பாய்ச்சல்

இஸ்லாமாபாத் (17 பிப் 2020): பாகிஸ்தானில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்துள்ள நீதிமன்றம் “இது பாகிஸ்தான், இந்தியாவல்ல”என்றும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மனித உரிமைகள் தலைவர் மன்சூர் பஸ்தீன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 23 பேர் கடந்த மாதம் இஸ்லாமாபாத் போலீசாரால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களின் ஜாமீன் மீதான மனு விசாரணையின்போது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அதார் மினல்லா பிறப்பித்த…

மேலும்...

இந்திய குடியுரிமை சட்டத்திற்கு உலக அளவில் வலுக்கும் எதிர்ப்பு – இன்னொரு அமெரிக்க நகரசபை தீர்மானம்!

நியூயார்க் (14 பிப் 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சியாட்டிலை அடுத்து மேலும் ஒரு அமெரிக்க நாட்டின் நகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இது சர்வதேச அளவிலும் பரவியுள்ளது. உலகின் மிக முக்கிய நாடுகளின் தலைநகரங்களில் பொதுமக்கள் சிஏஏவை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவின் சியாட்டில் நகரசபை இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், என்.ஆர்.சிக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றியது….

மேலும்...

கொரோனா வைரஸ் பாதிப்பு – ஒருவர் அதிகாரிகளால் சுட்டுக் கொலை!

பியாங்யாங் (14 பிப் 2020): வட கொரியாவில் கொரோனா பாதிப்பு சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை அதிகாரிகள் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் பரவிய புதிய கொடிய வகை கொவைட்-19 என பெயரிடப்பட்டுள்ள வைரஸ், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் தாக்குதல் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. சீனாவில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வூகானில்…

மேலும்...

ஹபீஸ் சயீதுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி பாக். நீதிமன்றம் தீர்ப்பு!

லாகூர் (12 பிப் 2020): பயங்கரவாதத்திற்கு துணை போனதாக ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் ஹபீஸ் சயீத்துக்கு இந்த சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் லாகூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது ஹபீஸ் சயீத் தான் என பாகிஸ்தானிடம் இந்தியா முறையிட்டது. ஆனால் ஹபீஸ் சயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்ததுடன் போதிய ஆதாரம்…

மேலும்...