கோலாலம்பூர் (25 பிப் 2020): மஹாதீர் முஹம்மதுவின் ராஜினாமாவை அடுத்து மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வியே தற்போது ஓங்கி நிற்கிறது.
மகாதீர் விலகியதையடுத்து, அன்வார் இப்ராகிம் தலைமையில் ஆட்சியமைக்க வழியுண்டா? என்று அவர் பிகேஆர் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.
மகாதீர் சார்ந்துள்ள பெர்சாத்து கட்சிக்கு நாடாளுமன்றத்தில் 26 எம்பிக்கள் உள்ளனர். பிகேஆர் கட்சியில் இருந்து 10 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஆதரவை இழந்துவிட்டதால், இயல்பாகவே அன்வார் தலைமையிலான நடப்பு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துவிட்டது.
எனினும் வேறு ஏதேனும் திருப்பங்கள் நிகழுமா? என்பது தெரியவில்லை. மலேசிய மக்கள் தங்களுடைய அடுத்த பிரதமர் யார் என்பதை அறிய காத்திருக்கின்றனர்.
ஒருவேளை நடப்பு அரசியல் குழப்பங்களை மனதிற்கொண்டு மலேசிய மாமன்னர் மீண்டும் பொதுத்தேர்தலை நடத்த உத்தரவிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக அன்வார் இப்ராஹிம் உடனான கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த ராஜினாமா ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நேற்று அன்வார் மகாதீரை சந்தித்துப் பேசினார். இதனை அடுத்து மகாதீர் முஹம்மது ராஜினாமா செய்யும் முடிவை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.