குச்சிப்புடி நடனமாடிய இங்கிலாந்து பிரதமரின் மகள்!

லண்டன் (27 நவ 2022): இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மகள் லண்டனில் குச்சிப்புடி நிகழ்ச்சியில் பங்கேற்றார். 9 வயதான அனுஷ்கா சுனக் லண்டனில் ‘ராங் சர்வதேச குச்சிப்புடி நடன விழா 2022’ வின் ஒரு பகுதியாக இதில் கலந்துகொண்டு நடனமாடினார். இசைக்கலைஞர்கள், சமகால நடனக் கலைஞர்கள் (65 வயதுக்கு மேற்பட்ட கலைஞர்கள்), மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவர்கள் உட்பட 4 முதல் 85 வயதுக்குட்பட்ட 100 கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சுனக்கின் மகள் ஆடிய நடனத்தின் படங்களும்…

மேலும்...

ஹிஜாபை கழற்றிய நடிகை கைது!

தெஹ்ரான் (21 நவ 2022): இரான் திரைப்பட நட்சத்திரம் ஹெங்கமே காசியானி ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்ஸ்டாகிராம் பதிவில் ஹிஜாப் அணியாமல் தோன்றியதால் அவர் கைது செய்யப்பட்டார். காசியானி இன்ஸ்டா பதிவில், ஹிஜாப் இல்லாமல் இன்ஸ்டாகிராமில் இதுவே தனது கடைசி இடுகையாக இருக்கலாம். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியவில்லை. எனக்கு என்ன நேர்ந்தாலும், எனது கடைசி மூச்சு வரை ஈரானியர்களுடன் இருப்பேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள். என்று காசியானி தெரிவித்துள்ளார்.

மேலும்...

பிரபல பிரான்ஸ் மாடல் மரைன் எல் ஹிமர் இஸ்லாம் மதத்திற்கு மாறினார் – VIDEO

பாரிஸ் (07 நவ 2022): பிரபல பிரான்ஸ் மாடல் மரைன் எல் ஹிமர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் மரைன் தெரிவித்துள்ளார். மரைன் பல மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்திற்கு மாறினார், நவம்பர் 2 புதன்கிழமை வரை இதை வெளியிடவில்லை. இந்நிலையில் அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிந்துள்ள பதிவில், சவூதி அரேபியாவின் மக்காவில் உள்ள காபாவின் அருகே ஹிஜாப் அணிந்திருப்பது போன்றும், அத்துடன்ஷஹாதத் உச்சரிப்பது தொடர்பான வீடியோவையும் பகிர்ந்துள்ளார். “இந்த தருணங்கள்…

மேலும்...

உலக அளவில் முடங்கியது வாட்ஸ் அப்!

புதுடெல்லி (25 அக் 2022): வாட்ஸ் அப் உலக அளவில் முடங்கியுள்ளது. சிக்கலை ஒப்புக்கொண்ட மெட்டா செய்தித் தொடர்பாளர், ‘முடிந்தவரை விரைவாக’ சேவைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். மேலும் “சிலருக்கு தற்போது செய்திகளை அனுப்புவதில் சிக்கல் இருப்பதை நாங்கள் அறிவோம், மேலும் அனைவருக்கும் வாட்ஸ்அப்பை விரைவில் மீட்டெடுக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று ராய்ட்டர்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார். Realtime Monitor Downdetector இன் கூற்றுப்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ் அப் முடக்கம்…

மேலும்...

ஹிஜாப் அணிந்தால் வேலையில்லை – அதிர வைக்கும் தகவல்!

நெதர்லாந்து ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி நாடுகளில் ஹிஜாப் அணிந்து வேலைக்கு விண்ணப்பிக்கும் 65 சதவீத பெண்கள் நிராகரிக்கப்படுவதாக அதிச்சித்தகவல் வெளியாகியுள்ளது. நெதர்லாந்து ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, ​​ஹிஜாப் படங்களைத் தங்கள் CV உடன் இணைக்கும் முஸ்லீம் பெண்கள், தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்காமலேயே நிராகரிக்கப்படுகின்றனர். இந்த மூன்று நாடுகளிலும் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் எந்த அளவிற்கு இனவெறி மற்றும் பாகுபாடுகளுக்கு ஆளாகிறார்கள் என்பது கள ஆராய்ச்சியின் மூலம் வெளியாகியுள்ளது. இது…

மேலும்...

ஆப்கானிஸ்தான் நில நடுக்கம் – பலி எண்ணிக்கை 1150 ஆக உயர்வு!

காபூல் (25 ஜூன் 2922): ஆப்கானிஸ்தானில் கடந்த 22ல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,150 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகளை செய்ய முடியாமல் திணறி வருவதால், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஆப்கான் பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள பாக்டிகா மற்றும் கோஸ்ட் மாகாணங்களில், ரிக்டர் அளவில் 6.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. பாக்டிகா மாகாணத்தில் கடும் சேதம் ஏற்பட்டுஉள்ளது. இது, மலைப்பகுதி என்பதால் அங்குள்ள வீடுகள், கட்டடங்கள்…

மேலும்...

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து அமெரிக்காவில் ஆர்ப்பாட்டம்!

நியூயார்க் (24 ஜூன் 2022): இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் ஆறு அமைப்புகள் அடங்கிய கூட்டமைப்பு அமைதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவில் முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்கள், மற்றும் இந்தியாவில் 200 மில்லியன் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுதல், சட்டவிரோத கைதுகள் மற்றும் இந்தியாவில் முஸ்லிம் வீடுகள் சட்டவிரோதமாக இடிப்பு ஆகியவற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆறு அமைப்புகளின் கூட்டமைப்பு அமைதியான போராட்டம் மற்றும் பேரணியை நடத்தவுள்ளதாக்க. இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் (IAMC) தெரிவித்துள்ளது. இதுகுறித்த IAMC…

மேலும்...

இம்ரான்கான் ஆட்சி கவிழ்ப்பு – புதிய பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீப்?

இஸ்லாமாபாத் (10 ஏப் 2022): பாகிஸ்தானில் இம்ரான்கான் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில் டுத்த பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் இம்ரான் கான் சனிக்கிழமை ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். மொத்தம் 174 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கானுக்குப் பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்க வாய்ப்பு உள்ளது. ஷெபாஸ் ஷெரீபை…

மேலும்...

பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பம் – உச்சநீதிமன்றம் இன்று விசாரணை!

இஸ்லாமாபாத் (04 ஏப் 2022): பாகிஸ்தான் அரசியலில் திடீர் திருப்பமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தானில் நேற்று இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பை துணை சபாநாயகர் குவாஸிம் கான் சுரி நிராகரித்தார். அதேவேளை இம்ரான்கான் கோரிக்கையை ஏற்று அங்கு அமைச்சரவை கலைக்கப்பட்டதால், புதிதாக விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. அதே…

மேலும்...

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு!

இஸ்லாமாபாத் (03 ஏப் 2022): இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து பாகிஸ்தான் அதிபர் அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கானை பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்றம் இன்று காலை கூடியபோது இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் ரத்து செய்யப்பட்டது. இந்த தீர்மானம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனக்கூறி தீர்மானத்தை நிராகரித்தார். இந்நிலையில், பாகிஸ்தான்…

மேலும்...