சென்னை (28 அக் 2021): நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை நடத்துவது வழக்கம் என்றும், ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினி தற்போது நலமுடன் உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே மருத்துவமனைக்கு நடிகரும் உறவினருமான ராகவேந்திரா வந்துள்ளார்.