பிக்பாஸ் 4 தமிழ் – போட்டியாளர்கள் பெயர் பட்டியல்!

Share this News:

சென்னை (31 ஆக 2020): விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் அக்டோபரில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான டிரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீசனையும் கமல் ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் போட்டியாளர்களாக யாரெல்லாம் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்ற எதிர் பார்ப்பு எகிரியுள்ளது.

போட்ட்டியாளர்களாக, சீரியல் நடிகை ஷிவானி நாராயணன், அனுமோகன், நடிகை பூனம் பாஜ்வா, வனிதா சர்ச்சைப் புகழ் சூர்யா தேவி, ஷனம் ஷெட்டி, நடிகை ரம்யா பாண்டியன், கலக்கப்போவது யாரு புகழ், சூப்பர் சிங்கர் ஷிவாங்கி, தொகுப்பாளினி மணிமேகலை, அம்ரிதா, நடிகை அதுல்யா ரவி, நடிகை கிரண் ரத்தோட் மற்றும் வித்யுலேகா ராமன் உள்ளிட்டவர்கள் பங்கு பெறுகிறார்கள் என்று தகவல்கள் கசிந்துள்ளன. அதேபோல நீயா நானா கோபிநாத்தும் கலந்து கொள்ளக் கூடும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

எனினும் இவற்றை விஜய் டிவி உறுதிபடுத்தவில்லை.


Share this News:

Leave a Reply