அந்த பெண்ணுக்கு எப்படியெல்லாம் தொல்லை தந்தார் தெரியுமா? – வைரமுத்து மீது பாடகி சின்மயி அடுத்த பகீர் புகார்!

Share this News:

சென்னை (14 அக் 2020): கவிஞர் வைரமுத்து மீது மேலும் ஒரு பாலியல் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் பாடகி சின்மயி.

மீ டூ இயக்கம் மூலம் பிரபல பாடகி சின்மயி கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து பல பெண்கள் வைரமுத்து மீது புகார் தெரிவித்தனர். அதன் பிறகு சின்மயி பாதிக்கப்பட்ட பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் பிரபல சேனலின் விஜே வுக்கும் வைரமுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக சின்மயி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது :

வைரமுத்துவுக்கு எதிரான உங்களின் மீடூ இயக்கத்தை பார்த்ததில் இருந்தே இந்த சம்பவம் பற்றி உங்களிடம் கூற நினைத்தேன். என் பெயரை சொல்வதில் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் என் மாமனார், மாமியார் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அதனால் தயவு செய்து என் பெயரை பயன்படுத்த வேண்டாம். என்னை 17வது பெண் என்று வைத்துக் கொள்ளுங்கள்.

நான் கல்லூரியில் படித்தபோது புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டேன். அப்பொழுது நான் வைரமுத்துவிடம் ஆட்டோகிராஃப் கேட்டேன். அவர் கையெழுத்திட்டதுடன், தன் தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டார். எனக்கு அது வித்தியாசமாக தெரியவில்லை. அதனால் கண்டுகொள்ளவில்லை.

அதன் பிறகு நான் பிரபல தமிழ் சேனல் ஒன்றில் விஜேவாக வேலை செய்யத் துவங்கினேன். அப்பொழுது வைரமுத்து என்னை சந்தித்து, என் தொடர்பு எண்ணை கேட்டார். நானும் யோசிக்காமல் கொடுத்துவிட்டேன். அவர் அதிக தொல்லை கொடுத்தார். அவரின் எண்ணத்தை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். மவுண்ட் ரோடு அருகே உள்ள ஒரு இடத்திற்கு வருமாறு அடிக்கடி அழைத்தார். ஒரு மணிநேரத்திற்கு 50 முதல் 60 முறை கால் செய்தார். தன் கனவில் கண்ட தேவதை நான் என்று அவர் கூறினார்.

இதையடுத்து என் மீடியா பாஸ்களிடம் கூறி அவரின் மனைவியிடம் பேசி அவரை அடக்கி வைக்க வேண்டியதாகிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply