பெங்களூரு (23 ஜன 2020): பிரபல தெலுங்கு நடிகை ரஷ்மிகாவின் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலபுகழ் பெற்றவர் ரஷ்மிகா.இவர் தற்போது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருகிறார்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள ராஷ்மிகாவின் தந்தை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து மொத்தம் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.