புதுடெல்லி (23 ஜன 2020): மத்திய நிதியமைச்சகம் கொண்டாடிய ஹல்வா விழாவை அசாதுத்தீன் உவைசி கிண்டலடித்துள்ளர்.
மத்திய நிதி அமைச்சகம் ஹல்வா விழாவை அதன் தலைமையகத்தில் கொண்டாடியது. இந்த விழாவிற்கு மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்நிலையில் இந்த விழா குறித்து கறீம் நகரில் பேசிய உவைசி, “ஹல்வா என்பது இந்தியாவின் எந்த மொழியிலும் உள்ள வார்த்தை கிடையாது. அது அரபிய வார்த்தை, ஆக நீங்கள் அரபிய வார்த்தையை ஆதரிக்கிறீர்கள் என்று அர்த்தம். அது நல்ல விசயம்தான் , ஆனல் நான் ஹல்வா போன்ற இனிமையானவன் கிடையாது. நான் மிளகா போன்று காரமானவன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட உள்ளது. குறிப்பிடத்தக்கது.