முடிவுக்கு வந்தது பிபிசி அலுவலக சோதனை!

மும்பை (17 பிப் 2023): பிபிசியின் மும்பை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை 60 மணி நேரத்திற்கு பிறகு முடிவுக்கு வந்தது. பிபிசியின் 100 ஆண்டு கால வரலாற்றில் இதுபோன்ற செயலை எதிர்கொள்வது இதுவே முதல் முறை. வருமான வரித்துறையினர் 10 ஆண்டு கணக்குகளை விரிவாக ஆய்வு செய்துள்ளனர். நோட்டீஸ் கொடுக்கப்பட்டாலும் பிபிசி தரப்பில் எதிர்மறையான அணுகுமுறை இருந்ததே சோதனைகளுக்கு காரணம் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது. அதேவேளை அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும், அவர்களின் தனிப்பட்ட…

மேலும்...

இந்தியாவில் உள்ள பிபிசி அலுவலகங்களில் திடீர் சோதனை!

மும்பை (14 பிப் 2023): மும்பை மற்றும் டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான பிபிசி ஆவணப்படம் வெளியானதை அடுத்து இந்த விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தை மையமாக வைத்து உலக அளவில் பிபிசி நிறுவனம் செய்திகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் தனது சேவையை வழங்கி வருகிறது. இதனிடையே 2002 குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக தலைவிரித்தாடிய வன்முறை தொடர்பாக பிரதமர்…

மேலும்...

ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு!

சென்னை (02 ஏப் 2021): சென்னை நீலாங்கரையில் ஸ்டாலின் மகள் செந்தாமரை விட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சபரீசன் வீட்டில் நடைபெறக்கூடிய வருமான வரி சோதனை சோதனையை முன்னிட்டு வீட்டில் இருக்கக்கூடிய யாரும் வெளியே உள்ளவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு வருமானவரித் துறையினர் தடை விதித்துள்ளனர். அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அவரது வீடு மற்றும் அலுவலகம் உள்ளிட்ட 4 பகுதிகளில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே…

மேலும்...

விஜயை விடாது துரத்தும் வருமான வரித்துறை!

சென்னை (12 மார்ச் 2020): நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிகில்’ படத்துக்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்பு குறித்தும் நடிகர் விஜய் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், சொத்து முதலீடு குறித்தும் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமான வரி அதிகாரிகள் 24 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில்…

மேலும்...

பாஜகவில் சேர்ந்த வேகத்தில் பாஜகவை எதிர்த்த திரை பிரபலம்!

சென்னை (09 பிப் 2020): நடிகர் விஜய்க்கு எதிராக பாஜகவினர் போராடுவதற்கு பாஜகவில் சமீபத்தில் இணைந்துள்ள இயக்குநர் பேரரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமீபத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதால் நடிகர் விஜய் தேசிய அளவில் பேசுபொருளானார். ஒரு வழியாக வருமான வரித்துறை சோதனை முடிந்து மாஸ்டர் படப்பிடிப்பு மீண்டும் நெய்வேலியில் தொடங்கி இருக்கிறது. ஆனால், பாஜக விடுவது போல் இல்லை. என்எல்சி பகுதிக்கே சென்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ரசிகர்களும் குவிய.. கடைசியில் அந்த…

மேலும்...

ரஜினி குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தில் ஒரு பின்னணி உண்டாம்!

சென்னை (07 பிப் 2020): ஐ.டி.ரெய்டு வந்துவிடுவார்கள் என்பதால்தான் குடியுரிமை சட்டத்திற்கு ரஜினி ஆதரவு தெரிவித்துள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் கம்பத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார். அப்போது நிருபர்களிடம் பேசிய அழகிரி, “நடிகர் ரஜினிகாந்த்துக்கு குடியுரிமை சட்டம் பற்றி தெரியாது. வருமான வரி…

மேலும்...

விஜய் வீட்டு சோதனையில் சிக்கியது எவ்வளவு? – வருமான வரித்துறை விளக்கம்!

சென்னை (06 பிப் 2020): விஜய்யின் வீடு, ஏஜிஎஸ் குழும சொத்துக்களில் ரெய்டு நடந்து வருவது குறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பிகில் விவகாரம் தொடர்பாக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள், விஜய்யின் வீடுகள், பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் நேற்று முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தை சேர்ந்த ஒரு தயாரிப்பாளர், பிரபல நடிகர், அவரின் வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் ஆகியோரின்…

மேலும்...

பிகில் ஏற்படுத்திய திகில் – நடிகர் விஜய் வீட்டில் விடிய விடிய சோதனை!

சென்னை (06 பிப் 2020): நடிகர் விஜய் வீட்டில் நேற்று தொடங்கிய வருமான வரித்துறையினர் சோதனை இன்றும் தொடர்கிறது. நடிகர் விஜய் நேற்று நெய்வேலியில் நேற்று ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்தார். அப்போது அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், விஜயை கையோடு அழைத்து வந்து சென்னையில் அவரது இல்லத்தில் வைத்து சோதனை நடத்தினர். அது விடிய விடிய தொடர்ந்தது. மேலும் இன்றும் சோதனை தொடர்கிறது. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவத்திற்கு சொந்தமான இடங்களில் நேற்று (பிப்.,05)…

மேலும்...

நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை – படப்பிடிப்பு நிறுத்தம்!

சென்னை (05 பிப் 2020): நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையின திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “மாஸ்டர்” படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில், கடந்த 3- ஆம் தேதி தொடங்கியது. மூன்றாம் நாளான இன்று மதியம் படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாப்பு படைவீரர்களுடன் உள்ளே நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை தனியே அழைத்து சம்மன் வழங்கி, சிறிது நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் திடீரென்று விஜயை அங்கிருந்து அவரது…

மேலும்...

நடிகை ரஷ்மிகாவின் சொத்துக்கள் பறிமுதல்!

பெங்களூரு (23 ஜன 2020): பிரபல தெலுங்கு நடிகை ரஷ்மிகாவின்  5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்‍களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலபுகழ் பெற்றவர் ரஷ்மிகா.இவர் தற்போது கோடிக்‍கணக்‍கில் சம்பளம் வாங்கி வருகிறார்.  இந்நிலையில் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள ராஷ்மிகாவின் தந்தை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன….

மேலும்...