நாய் சேகர் ரிட்டன்ஸ்’ மோஷன் போஸ்டர்

Share this News:

சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு நடித்துள்ள திரைப்படம் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியானது.

அதன் பிறகு படத்தின் கதைக்கு நகைச்சுவையான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இயக்குனர் குழுவும், வடிவேலும் ஈடுபட்டு வந்தனர்.மேலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு நடிக்க வருவதால், இந்தத் திரைப்படம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் நேற்று நடந்து முடிந்த நிலையில், தற்போது மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.


Share this News:

Leave a Reply