தனுஷ் அசுரன் என்ற அசுர வெற்றிக்குப் பிறகு என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை கொடுத்து சுட்டுக் கொண்டார். எனவே பட்டாஸ் நல்லவிதத்தில் அமையும் என்ற நினைப்பில் சென்ற ரசிகர்களுக்கு எவ்வாறு அமைந்தது என்று பார்ப்போம்.
தனுஷ் பட்டாஸாக ஒரு திருடனாக ஊரில் ஜாலியாக தன் நண்பர் கலக்கப்போவது யாரு சதீஷுடன் சுற்றி வருகிறார். அவ்வப்போது சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார். அவரை எதிர்வீட்டு பெண்ணாக கண்களை ஈர்க்கிறார் ஹீரோயின் மெஹ்ரீன்.
மறுபக்கம் சினேகா அடிமுறை என்னும் தற்காப்பு கலை பயின்று தன் ஆசானையே கணவனாக பெற்றவர். அவருக்கு வில்லன் நவீன் சந்திராவால் பெரும் அழிவு. தன் மகனை தொலைத்த ஏக்கத்திலும் தன்னை விட்டு பிரிந்த கணவரின் சோகத்தில் சிறையிலிருந்து வெளியே வருகிறார்.
இதற்கிடையில் சினேகாவுக்கு ஒரு பெரும் ஆபத்து. அவரை காப்பாற்ற போய் பல உண்மைகள் தனுஷுக்கு தெரியவருகிறது. சினேகாவுக்கு நேர்ந்தது என்ன? அவரின் மகன் கிடைத்தாரா? அழிக்கப்பட்ட தற்காப்பு கலை மீண்டும் உயிர் பெற்றதா என்பதே இந்த பட்டாஸ்.
தனுஷின் நடிப்பு திறமையை எடுத்துச்சொல்ல அசுரன் படமே போதும். இன்னும் தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தால் சிவசாமி தெரிகிறார் என அவரே கூறியுள்ளார். இந்த படத்தில் சென்னை பாஷையில் பட்டாஸாக அவர் பேசியது இண்ட்ரஸ்டிங். தன் பின்னணி என்ன என தெரிந்தும் தற்காப்பு கலையை வெளிப்படுத்தும் உருமாற்றமும் நேர்த்தியாக அமைந்துள்ளது.
ஹீரோயின் மெஹ்ரீன் உயர்ந்த வேலையில் அதிக சம்பளம் கிடைத்தது செய்யும் அலம்பல் இருக்கே. அப்பப்பப்பா.. தனுஷ் ஜோடியாக அவர் லைட் ரொமான்ஸ் காட்டுகிறார்.
புன்னகை இளவரசி சினேகாவை இப்படத்தில் பார்த்தது பலருக்கும் மகிழ்ச்சி. ஆனால் அவரின் முகத்தை ஓரு வீரமும், இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கமும் மட்டுமே. ஒரு தாயாக உணர்வுகள் அதிகமாக கொட்டாமல் சகித்துச்செல்லும் சிங்கப்பெண் போல நடந்துகொள்வது பாராட்டத்தக்கது.
காமெடிக்கு முனிஷ்காந்த் இயல்பாக தன் நடிப்பை பதிவு செய்திருக்கிறார். இவருடன் கூட்டணி சேரும் தனுஷ், கலக்கப்போவது யாரு சதீஷ் போடும் கவுண்டர் கலக்கல்.
நிறைய தெலுங்கு படங்களில் நடித்துள்ள வில்லன் நவீன் சந்திரா ஹீரோவுக்கு இணையாக ஒரு துடிப்பை கையாள்கிறார். இனி இவருக்கு தமிழில் படங்கள் வர வாய்ப்புகளும் உண்டு.
தனுஷை வைத்து கொடி படத்தை இயக்கியிருந்த துரை செந்தில் குமார் தற்போது பட்டாஸ் படத்தில் மீண்டும் கூடியுள்ளார். கொடி படமே ஓகே. இந்த படம் கொஞ்சம் ஸ்லோ என சொல்லும் படி வைத்துள்ளார். 7 ம் அறிவு போன்ற படங்களை பார்த்து வந்தவர்களுக்கு இந்த படம் சுமார் ரகம்தான்.
-தல தளபதி