பெங்களூரு (18 பிப் 2020): பிரபல கன்னட திரைப்பட பின்னணி பாடகி சுஸ்மிதா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுஷ்மிதா ராஜி.. இவருக்கு வயது 26. எம்பிஏ பட்டதரியான இவர் சினிமாவில் ஏராளமான பாடல்கள் பாடி புகழ் பெற்றவர். இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமும் உண்டு.
இந்நிலையில் சுஷ்மிதாவுக்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது.. மாப்பிள்ளை பெயர் சரத்குமார்… சாப்ட்வேர் என்ஜினியர்… கூட்டுக்குடும்பத்தில் சுஷ்மிதா அடியெடுத்து வைக்க.. குடும்பம் சந்தோஷமாகவே சென்றது.
. திடீரென சரத்குமாரும் அவரது குடும்பத்தினரும் வரதட்சணை பிரச்சனையை ஆரம்பித்தனர்… சுஷ்மிதாவை கொடுமைப்படுத்துவதும் துவங்கியது.. இதனால் நொந்துபோன சுஷ்மிதா பெற்றோரிடம் போன் செய்து, இதை பற்றி புலம்புனார்.. கண்ணீர் வடித்தார்… ஆனால் சில வாரங்களாகவே கொடுமை அதிகரித்துவிட்டது.
இந்நிலையில் அன்னபூர்னேஸ்வரிநகர் மாலகாலாவில் உள்ள தன் அம்மா வீட்டிற்கு நேற்று வந்தார்.சுஸ்மிதா. குடும்பத்தினருடன் மக்ழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்த சுஸ்மிதா. இரவு உறங்கச் சென்றவர் விடிந்தும் ரூமிலிருந்து வெளியே வரவில்லை.
பிறகு சகோதரன் மற்றும் அம்மா ஆகியோர் செல்போன்னில் வாட்ஸ் அப் மெஸேஜை செக் செய்தபோது சுஸ்மிதா அனுப்பிய மெஸேஜில் தற்கொலைக்கான காரணத்தை அனுப்பி வைத்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் “அம்மா என்னை மன்னிச்சிடு.. நான் செய்த தப்புக்கு நானே தண்டனை அனுபவிச்சிட்டேன்.. என் கணவர், அவரது பெரியம்மா வைதேகியின் பேச்சை கேட்டு தொடர்ந்து வரதட்சணை தொல்லை தந்தார்.
கணவனின் சகோதரி கீதாவும் இதற்கு காரணம். இவங்க எல்லாராலும் நான் ரொம்பவும் மன, உடல் ரீதியாக நொந்து போய்ட்டேன்… அவங்க கால்ல விழுந்தும்கூட என்னை விடவில்லை. அந்த வீட்டிலேயே தற்கொலை செய்துக்கலாம்னுதான் நினைச்சேன்.. ஆனால் என்னால் முடியவில்லை… பிறந்த வீட்டில் தற்கொலை செய்தால்தான், முறையான ஆதாரங்கள் கிடைக்கும் என்று நினைத்துதான் இங்க வந்தேன்… என் தற்கொலைக்கு காரணம் அவங்கதான். அவங்களை சும்மா விட்டுடாதீங்க.. சரியான தண்டனை வாங்கி தந்துடுங்க… நம்ம சொந்த ஊரிலேயே என்னை புதைச்சுடுங்க.. இல்லேன்னா எரிச்சிடுங்க” என்று இருந்தது.
இதையடுத்து கணவன் சரத்குமார், பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.. அவர்கள் மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
பிரபல பாடகி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.