ஹரித்வார் (18 பிப் 2020): பாகிஸ்தானில் நாங்கள் நிம்மதியாகவே வாழ்கிறோம் என்று பாகிஸ்தானிலிருந்து அரித்வார் வந்துள்ள இந்து பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தி பத்திரிகை ஒன்றிற்கு அவர்கள் அளித்துள்ள பேட்டியில், இந்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் ஒரு அரசியல் விளையாட்டு என்று தெரிவித்துள்ள அவர்கள், உண்மையில் பாகிஸ்தான் இந்துக்கள் மீது இந்திய அரசுக்கு அனுதாபம் இருப்பின், இந்தியா வரும் இந்துக்களுக்கு விசா நடைமுறைகளை இலகுவாக்கினாலே போதும். என்றனர்.
நாங்கள் இந்தியாவுக்கு யாத்திரை வரவேண்டும் என்றல் இந்திய அரசின் விசா நடைமுறைகளால் பல சிரமங்களை சந்திக்கிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் நீலம் சோலங்கி என்ற பக்தர் கூறும்போது, விசாவிற்கு விண்ணப்பிக்க முகவர்களின் உதவியை நாங்கள் எடுக்க வேண்டும், அதற்காக நாங்கள் ஒரு பெரிய தொகையை கொடுக்க வேண்டும். இது தவிர ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரே நேரத்தில் விசா கிடைக்காது. எனவே பாகிஸ்தானில் இருந்து வரும் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் விசா கிடைக்க இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்..
மேலும் பாகிஸ்தானில் நாங்கள் பாகிஸ்தான் என்ற நாடு உருவானது முதலே வாழ்கிறோம். எங்களுக்கு அங்கு எந்தவித சிரமும் இல்லை. எல்லாவிதமான இந்து பண்டிகைகளையும் மகிழ்வாகவே கொண்டாடுகிறோம். என்று அவர்கள் தெரிவித்தனர்.