சென்னை (15 டிச 2020): பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா -வின் தற்கொலை வழக்கில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்ஷனுக்கும் தொடர்பிருப்பதாக திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தத் தற்கொலை வழக்கில் சித்ராவின் கணவர் ஹேமந்த் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகை சித்ரா குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சியான தகவல்களை ஒரு பிரபல பத்திரிகை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் சீரியல் நடிகை சித்ராவும் விஜய் டிவி தொகுப்பாளரும் நடிகருமான ரக்ஷனும் டேட்டிங் சென்றதாகவும் அப்போது ரக்ஷன், சித்ரா உடன் நெருக்கமாக இருக்கும்படி வீடியோவை எடுத்து மிரட்டியதாகவும் சித்ராவின் நெருங்கிய தோழி ஒருவர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காவல்துறை யினர் விசாரிக்கும் கோணமும் மாறியுள்ளது.