சென்னை (07 மே 2020): சுசி லீக்ஸ் ஆபாச வீடியோக்கள் வெளியானது குறித்து முதல்முறையாக பாடகி சுசித்ரா மனம் திறந்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
நான் 100 சதவீதம் மாறிவிட்டேன். கடந்த 12 ஆண்டுகளில் என் வாழ்வில் ஏகப்பட்ட ஏற்றத் தாழ்வுகள் நடந்துவிட்டது. இப்போது என் வீட்டு சமையல் அறையில் ஸ்டுடியோ வைத்து அங்கிருந்து தான் ஆர்.ஜே. வேலையை செய்து கொண்டிருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. சமையல் செய்வது எனக்கு பொழுதுபோக்கு.
சுசி லீக்ஸ் பிரச்சனைக்குப் பிறகு நான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன். அப்பொழுது தான் சமையல் எனக்கு கை கொடுத்தது. நான் முறைப்படி சமையல் குறித்து படித்தேன் என்றார்.
என் முன்னாள் கனவர் கார்த்திக் என்னைப் பற்றியும் நான் மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் அந்த வீடியோவை வெளியிடாமல் இருந்திருக்க வேண்டும். அதனால் பலர் குழப்பம் அடைந்துவிட்டனர். அது என் வேலையை பாதித்தது. வீடியோ வெளியிட்டது மோசமான ஐடியா என்பதை கார்த்திக் பின்னர் உணர்ந்து அதை நீக்கிவிட்டார்.
அந்த ஆபாச வீடியோக்கள்… யார் இப்படி பிரபலங்களின் தனிப்பட்ட வீடியோக்களை வெளியிட்டது, அந்த வீடியோக்களுக்கு பின்னால் இருக்கும் பெரிய கை யார் என்பது எல்லாம் எனக்கு அதிர்ச்சி அளித்தது. இது நாள் வரை நான் அதில் ஒரு வீடியோவை கூட பார்த்தது இல்லை.
நடந்த சம்பவங்களால் மோசமாக உணரவில்லை. ஆனால் மக்கள் தங்கள் சவுகரியத்திற்கு ஏற்ப விஷயங்களை நம்பியது அதிருப்தி அளிக்கிறது. அமலா பால் உள்ளிட்ட சிலர் எனக்கு ஆதரவளித்தார்கள் என்றார்.