முஸ்லிம் முறைப்படி திருமணம் நடந்தது – செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா பரபரப்பு பேட்டி!

Share this News:

சென்னை (07 அக் 2022): பிரபல சீரியல் நடிகை திவ்யா அவரது கணவர் அர்னவ் மீது பரபரப்பு குற்ரச்சாட்டுகளை வைத்துள்ளார்.

செவ்வந்தி சீரியலின் மூலம் பிரபலமானவர் திவ்யா. இவருக்கும் அர்னவ் என்ற சீரியல் நடிகருக்கும் காதலாகி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அர்னவ் நெய்னா முஹம்மது என்ற பெயர் கொண்ட முஸ்லிம், எனினும் சீரியலுக்காக அர்னவ் என பெயரை மாற்றிக் கொண்டார்.

இந்நிலையில் திவ்யாவுக்கும், அர்னவுக்கும் முஸ்லிம் முறைப்படி திருமணம் நடந்துள்ளது. இதற்காக திவ்யா முஸ்லிமாக மதம் மாறியுள்ளார். ஆனால் கேரியர் பாதிக்கப்படும் என்பதால் இந்த் ரகசியத்தை இருவரும் மறைத்துள்ளனர்.

ஆனால் தற்போது இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். திவ்யா ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளவர் அதனை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார் என்பதாக அர்னவ் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அதேவேளை திவ்யா, அர்னவ் தன்னை புறக்கணிப்பதாகவும் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம் சாட்டி வருகிறார்.

இதற்கிடையே இந்து முறைப்படி இருவருக்கும் இடையே இந்து முறைப்படி நடந்த திருமணம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால் அந்த வீடியோ ஒரு விளம்பர காட்சிக்காக எடுக்கப் பட்ட போலி வீடியோ அது உண்மையான திருமண வீடியோ இல்லை என அர்னவ் தரப்பு கூறி வருகிறது. ஆனால் உண்மை என்ன என்பது விரைவில் தெரிய வரும்.


Share this News:

Leave a Reply