முஸ்லிம் மதரஸாவில் நுழைந்து பூஜை நடத்திய இந்துத்துவா கும்பல் -வீடியோ!

Share this News:

பெங்களூரு (07 அக் 2022): கர்நாடக மாநிலம் பிதாரில் தசரா கொண்டாட்டத்தின் போது வரலாற்று சிறப்பு மிக்க மஹ்மூத் கவான் மதரஸா வளாகத்திற்குள் புகுந்த இந்துத்துவா கும்பல் பூஜை நடத்தியுள்ளது.

1460 களில் கட்டப்பட்ட இந்த மதரஸா இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ளது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியலில் மதரஸாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதன்கிழமை மாலை இந்த மதரஸாவில் நுழைந்த கும்பல் இந்த அட்டூழியத்தை நிகழ்த்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவும் வைரலாகி வருகிறது.

இச்சம்பவத்தில் ஒன்பது பேர் மீது பிடார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எனினும் எவரையும் கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என முஸ்லிம் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து முஸ்லிம் ஆர்வலர்கள் நடத்திய போராட்டம் கைவிடப்பட்டது


Share this News:

Leave a Reply