பசு கடத்தல் வழக்கில் 22 வயது இளைஞர் முஹம்மது அமீனுக்கு ஆயுள் தண்டனை!

Share this News:

புதுடெல்லி (21 ஜன 2023): பசுக்களை கடத்திய வழக்கில் 22 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் விசித்திர தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானைச் சேர்ந்த முகமது அமீன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டில், தெப்சி மாவட்டத்தின் நிஜார் காவல் நிலைய எல்லைக்குள் ஒரு டிரக்கில் 16 மாடுகளைக் கொண்டு சென்றபோது, மாடுகளை கடத்தியதாக அமீன் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்த வழக்கு குஜராத் வியாராவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குஜராத் விலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1954, பிரிவு 5, 6 மற்றும் 7ஐ மீறியதற்காக குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆயுள் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.

மேலும் அபராதத்தை செலுத்தாவிட்டால் மேலும் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சமீர் வினோத் சந்திர வியாஸ் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அந்த தீர்ப்பில், இந்துக்கள் புனிதமாகக் கருதும் பசுக்களை அறுப்பது பூமியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. “சாணத்தால் ஆன வீடுகள் அணுக் கதிர்வீச்சால் பாதிக்கப்படுவதில்லை. மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்துவது பல தீராத நோய்களுக்கு மருந்தாகும்” என்று நீதிபதி சமீர் வினோத் சந்திர வியாஸ் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும் “பசு ஒரு விலங்கு மட்டுமல்ல, ஒரு தாயும் கூட. பசுவைப் போல அடக்கமானவர்கள் யாரும் இல்லை.பசு 68 கோடி புண்ணிய ஸ்தலங்களையும் முக்கோடி கடவுள்களையும் கொண்ட கிரகம். இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பசுவுக்குக் கடன்பட்டிருக்கிறது.அதன் குணங்களும் நன்மைகளும் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. பசு வதை இல்லாத நாளில், பூமியின் அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்து, எங்கும் வளம் பெருகும்,” என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *