லக்னோ (21 ஜன 2023): உத்தர பிரதேசத்தில் ஆஷியானா பகுதியில் உள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தில் பிரதேச ஆயுத காவல் படை பிரிவை சேர்ந்த விபின் குமார் (வயது 25) என்ற பாதுகாப்பு வீரர் கடந்த ஒரு மாத காலம் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவர் அலிகாரி நகரின் கெய்ர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிலா பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பணி முடிந்து அரசு வாகனத்தில் தனது முகாமுக்கு அவர் திரும்பியுள்ளார்.
அவர் வாகனத்தில் புறப்பட்ட சற்று நேரத்தில், துப்பாக்கி குண்டு வெடித்த பலத்த சத்தம் கேட்டது. உடனே, சக வீரர்கள் ஓடி சென்று பார்த்தனர். அதில், குண்டு காயங்களுடன் விபின் சுயநினைவற்று கிடந்துள்ளார்.
உடனடியாக அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார். அவர் தற்கொலை செய்து கொணடாரா? அல்லது யாரேனும் அவரை சுட்டு கொன்றனரா? அல்லது தற்செயலாக நடந்த விபத்தா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது என காவல் ஆய்வாளர் அஜய் பிரகாஷ் மிஷ்ரா கூறியுள்ளார்.
விபினுக்கு வருகிற குடியரசு தினத்தில் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.