பேருந்து ஆட்டோ மோதி விபத்து: 26 பேர் பலி!

Share this News:

மும்பை (29 ஜன 2020): மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் அரசு பேருந்தும், ஆட்டோவும் மோதிக்கொண்ட விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டம் மாலேகான்-தியோலா சாலையில், மேஷி பாட்டா என்ற இடத்தில் நாசிக் நகரில் உள்ள கல்வான் நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, எதிரே வந்த ஆட்டோ மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் இரண்டு வாகனங்களும் சாலையோரமாக இருந்த கிணற்றில் விழுந்தன. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார், மக்கள் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

எனினும், இச்சம்பவத்தில் உயிரிழந்த 21 பேரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டன. 32 பேர் காயமடைந்தவனர். அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். இதனிடையே உயிரிழந்தவா்களின் உறவினா்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுவதுடன், காயமடைந்தவா்களின் சிகிச்சை செலவை அரசு பேருந்து நிறுவனம் ஏற்கும் என அம்மாநில போக்குவரத்து அமைச்சா் அனில் பராப் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் மோடியும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்தார். இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 26ஆக உயர்ந்துள்ளது.


Share this News:

Leave a Reply