புதுடெல்லி (29 ஜன 2020): பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (29) இன்று பா.ஜ.கவில் இணைந்துள்ளார்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவரான சாய்னா நேவால் (29) ஹரியானாவில் பிறந்தவர் ஆவார். டெல்லி சட்டசபை தேர்தலுக்கான தீவிர பிரச்சாரங்கள் நடந்து வரும் நிலையில், பாஜகவுக்கு பெரிய பலமாக அவர் கட்சியில் இணைந்துள்ளார்.
நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளான ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா விருது உள்ளிட்டவைகளை பெற்றவர் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். முன்னாள் உலக நம்பர் 1 இடைத்தையும் இவர் பெற்றுள்ளார்.
பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா இதுவரை 24 சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ளார். மேலும், 2009ம் ஆண்டில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருந்த சாய்னா, 2015ல் முதலிடத்தையும் பெற்றார்.