டெல்லியில் ஐந்து வயது சிறுமி பாலியல் வன்புணர்வு – குற்றவாளி தலைமறைவு!

Share this News:

புதுடெல்லி (23 டிச 2022): தலைநகர் டெல்லியில் 5 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி தலைமறைவாகியுள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.

வடக்கு டெல்லியின் பல்ஸ்வா பால் பண்ணை பகுதியில் புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியை கடத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

புதன்கிழமை மாலை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை குற்றவாளி கடத்திச் சென்றுள்ளான்.

பின்னர், சிறுமியை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர், போலீசார் ஐபிசி 363 (கடத்தல்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

காணாமல் போன சிறுமியின் படம் மற்ற ஸ்டேஷன்களுக்கு அனுப்பப்பட்டு, போலீஸ் வாகனத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது.

இந்த நிலையில் வியாழன் அன்று இரவு 7 மணியளவில், போலீஸார் தேடியபோது, ​​அந்த சிறுமி பூங்காவிற்கு அருகில் படுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக டிவைஎஸ்பி தேவேஷ் குமார் மஹ்லா தெரிவித்தார்.

உடனடியாக சிறுமி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.

இதன் மூலம் எப்ஐஆரில் போக்சோ பிரிவையும், ஐபிசியில் கற்பழிப்பு பிரிவையும் போலீசார் சேர்த்தனர். குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்தில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, சந்தேக நபரின் பெயரை பொலிஸார் வெளியிடவில்லை. இந்த சம்பவம் குறித்து டெல்லி மகளிர் ஆணையம் காவல்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளது.

இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply