அழைத்த கவர்னர் – மறுத்த முதல்வர்!

புதுடெல்லி (27 ஜன 2023): தன்னை சந்திக்க வருமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தான் பஞ்சாப் செல்ல இருப்பதாக கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார். டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கும், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வருகிறது. அரசு பள்ளி ஆசிரியர்களை பின்லாந்து நாட்டுக்கு பயிற்சிக்கு அனுப்ப டெல்லி அரசு எடுத்த முடிவுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த 16-ந் தேதி, கவர்னர் மாளிகைக்கு அரவிந்த் கெஜ்ரிவாலும்,…

மேலும்...

குஜராத்தில் காங்கிரஸின் தோல்விக்கு காரணமான உவைசியும் ஆம் ஆத்மியும்!

அஹமதாபாத் (09 டிச 2022): ஆம் ஆத்மி கட்சியும் (ஏஏபி) மற்றும் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் குஜராத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரித்து காங்கிரஸின் கனவை தகர்த்துள்ளது. குஜராத்தில் சிறுபான்மையினர், முதன்மையாக முஸ்லீம்கள், கடந்த பல தசாப்தங்களாக, குறிப்பாக 2002 பிந்தைய குஜராத் கலவரத்திற்குப் பிறகு காங்கிரஸின் விசுவாசமான வாக்காளர்களாக உள்ளனர். இந்நிலையில் சட்டசபை தேர்தல் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடந்து, டிசம்பர் 8 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. பாரதிய…

மேலும்...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனை முடிவு என்ன சொல்கிறது?

புதுடெல்லி (09 ஜூன் 2020): டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வெளியாகியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் இவற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டு இருந்தார். இதனை அடுத்து அவருக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என கூறப்பட்டது. இதனை அடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வெளியாகியுள்ளது. கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து…

மேலும்...

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை!

புதுடெல்லி (08 ஜூன் 2020): டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் இவற்றால் பாதிக்கப்பட்டு தற்போது தனிமைபடுத்தப்பட்டுள்ளர். இதனை அடுத்து அவருக்கு செவ்வாய்க்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அதன்பிறகு காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக அவர் எந்தக் கூட்டத்திலும்…

மேலும்...

என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

புதுடெல்லி (13 மார்ச் 2020): என்.பி.ஆருக்கு எதிராக டெல்லி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. கணக்கெடுப்பின்போது யாரும் ஆவணங்களை காட்ட வேண்டிய அவசியம் இல்லையென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில் இன்று என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது:- என்.பி.ஆருக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. டெல்லியில் என்.பி.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட மாட்டாது. என்னிடமும் பிறப்புச் சான்றிதழ் இல்லை….

மேலும்...

மோடியின் சரிவு – சர்வதேச ஊடகங்கள் விமர்சனம்!

புதுடெல்லி (13 பிப் 2020): பிரதமர் மோடியின் சமீபத்திய சரிவுகள் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராக பதவியேற்கவுள்ளார். பல முக்கிய தலைவர்கள் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டபோதும், குடியுரிமை சட்டம், மக்கள் விரோத போக்கு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாஜக 8 இடங்களில் மட்டும்தான் வெற்றிபெற…

மேலும்...

மக்களுக்கு மன் கி பாத் தேவையில்லை – மோடி மீது உத்தவ் தாக்கரே தாக்கு!

மும்பை (11 பிப் 2020): மக்களுக்கு ‘மன் கி பாத் தேவையில்லை, ஜான் கி பாத் தான் அவசியம்’ என்று டெல்லி தேர்தல் முடிவு குறித்து உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளதோடு, ஆம் ஆத்மி 62 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், டெல்லி தேர்தல் முடிவுகள் குறித்து மகாராஷ்டிரத்தின் முதல்வரும், சிவசேனை கட்சியின் தலைவருமான உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ள கருத்தில், ‘டெல்லி…

மேலும்...

வகுப்புவாதத்தை வளர்ச்சித் திட்டங்கள் முறியடிக்கும் – ஸ்டாலின்!

சென்னை (11 பிப் 2020): வகுப்பு வாதங்களை வளர்சித் திட்டங்கள் முறியடிக்கும் என்பதற்கு உதாரணம் அரவிந்த் கெஜ்ரிவாலின் வெற்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர்; வகுப்புவாத அரசியலை வளர்ச்சி திட்டங்கள் முறியடிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கூட்டாட்சி உரிமைகள் மற்றும் பிராந்திய ஆர்வத்தையும் நம் நாட்டின் நலனில் பலப்படுத்தப்பட வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும்...

டெல்லி தேர்தல் அப்டேட்: ஆம் ஆத்மி 54 இடங்களில் முன்னிலை!

புதுடெல்லி (11 பிப் 2020): டெல்லி சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி 54 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 8 ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்த டில்லி சட்டசபையில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ள நிலையில் இன்று ( 11 ம் தேதி) காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. இதில் ஆம் ஆத்மி 54இடங்களிலும் பாஜக 16 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது….

மேலும்...

தேர்தல் ஆணையம் மீது சந்தேகம் எழுப்பும் அரவிந்த் கெஜ்ரிவால்!

புதுடெல்லி (09 பிப் 2020): தேர்தல் ஆணையம் வாக்கு சதவீதத்தை அறிவிக்காததற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் நேற்று (பிப்.,08) நடந்தது. இந்த தேர்தல்லின் முழு வாக்கு சதவீதத்தையும் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இது குறித்து டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடியுள்ளார். தேர்தல் ஆணையம் என்ன தான் செய்து…

மேலும்...