நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை – படப்பிடிப்பு நிறுத்தம்!

Share this News:

சென்னை (05 பிப் 2020): நடிகர் விஜயிடம் வருமான வரித்துறையின திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “மாஸ்டர்” படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில், கடந்த 3- ஆம் தேதி தொடங்கியது.

மூன்றாம் நாளான இன்று மதியம் படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாப்பு படைவீரர்களுடன் உள்ளே நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை தனியே அழைத்து சம்மன் வழங்கி, சிறிது நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் திடீரென்று விஜயை அங்கிருந்து அவரது காரில் அழைத்து சென்றுள்ளனர். இதனால் மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல் நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.


Share this News:

Leave a Reply