போபால் (20 ஜன 2020): போபாலில் பாஜகவினர் பெண் கலெக்டரின் முடியை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் போபாலி பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஞாயிறன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த ராஜ்கர் கலெக்டர் நிவேதா மற்றும் துணை கலெக்டர் பிரியா வர்மா ஆக்கியோரை சூழ்ந்து கொண்ட பாஜவினர் பிரியா வர்மாவின் முடியை பிடித்து இழுத்து தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் இடையேமோதல் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து அங்கு அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 124 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக கலெக்டர் பிரியா வர்மா பாஜகவை சேர்ந்த ஒருவரை கன்னத்தில் அறைந்ததாக தகவல் வெளியானது. அதனை மறுத்துள்ள பிரியா வர்மா ஆர்ப்பாட்டக் காரர்கள்தான் எனக்கு தொல்லை கொடுத்தனர் என்று தெரிவித்துள்ளார்.