லக்னோ (11 பிப் 2020): உத்திர பிரதேச பாஜக அமைச்சர் ரகுராஜ்சிங் இந்தியாவில் பர்தாவுக்கு தடை விதிக்க வேண்டும் என பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
பிரதமர் மோடி ஒரு பக்கம் நான் முஸ்லிம் பெண்களின் சகோதரன் என்று பொய் சொல்வார் இன்னொரு பக்கம் அவரது அமைச்சர் சகாக்கள். மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தைப் பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளன.அதிலும் மக்கள் பிரிதிநிதிகளான எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் அதிகமாக விஷ கருத்துக்களை கக்குகின்றனர்.
அந்தவகையில், உத்தர பிரதேச மாநிலத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க சார்பில் பேரணி நடைபெற்றது. அப்போது பேசிய மாநில பா.ஜ.க தலைவரும், அமைச்சருமான ரகுராஜ்சிங் இந்தியாவில் பர்தாக்கு தடை விதிக்கவேண்டும் எனப் பேசியுள்ளார்.
மேலும், “இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்கா இந்தியக் கலாச்சாரம் அல்ல, அது அரபு நாட்டின் கலாச்சார வழக்கம். இந்தியாவில் சிஏஏ-விற்கு எதிராக போராட்டம் நடத்திவரும் டெல்லி ஷாஹீன் பாக்கில் ஏராளமானோர் பர்தாவை தவறாக பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி, பயங்கரவாதிகளும் இந்தியாவிற்குள் ஊடுருவ பர்தாவை பயன்படுத்துகின்றனர். எனவே, மத்திய மாநில அரசுகள் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை விதிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்துள்ளன.
ஆனால் இதே பர்தாவை அணிந்து கொண்டுதான் டெல்லி ஷஹீன பாக் போராட்டக் களத்தில் பாஜகவை சேர்ந்த ஒரு பெண் நுழைந்து போராட்டத்தை சீர்குலைக்க முயற்சி மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.