குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ போர்க்கொடி!

Share this News:

போபால் (28 ஜன 2020): குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ நாராயன் திருப்பதி போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.

நாடு முழுவதும் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக(சிஏஏ), தேசிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மத்திய பிரதேச பாஜக எம்.எல்.ஏ நாராயன் திருப்பதி குடியுரிமை சட்டம் நம் நாட்டு இறையாண்மைக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவை மதத்தால் பிரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“நான் கிராமத்திலிருந்து வந்தவன். அங்கு ஒரு ஆதார் அட்டை எடுப்பது எவ்வளவு கடினம் என்று எனக்கு தெரியும் அப்படியிருக்க இதுபோன்ற சட்டங்கள் மக்களை மேலும் துன்புறுத்தும்” என்றும் நராயன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் குடியுரிமை சட்டம் பாஜகவினருக்குள்ளேயே குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply