உங்களுக்கு என்ன நடக்கிறதென்று தெரியுமா? – சோனியா காந்திக்கு பாஜக பதில்!

Share this News:

புதுடெல்லி (26 பிப் 2020): டெல்லி கலவரத்திற்கு, சோனியா காந்தி மத்திய அரசை குறை கூறும் செயல், தரம் தாழ்ந்த அரசியல் என பாஜக தெரிவித்துள்ளது.

டெல்லி கலவரம், திட்டமிட்ட சதி என திருமதி. சோனியா தெரிவித்துள்ளது, கண்டனத்துக்‍குரியது என மத்திய அமைச்சர் திரு. பிரகாஷ் ஜவடேகர் கூறினார். சீக்கியர்களின் ரத்தக்கறை படிந்துள்ள காங்கிரஸ், டெல்லி கலவரத்தை வைத்து தரமற்ற அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார்.

அமைதியை உறுதிபடுத்த வேண்டிய தருணத்தில், திருமதி. சோனியாவின் கருத்து, காவல்துறையின் மன உறுதியை பாதிக்‍கும் என தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், 3 முறை ஆலோசனை நடத்தப்பட்டு நடவடிக்‍கைகள் எடுக்‍கப்பட்டு வருவதாகவும் திரு. ஜவடேகர் குறிப்பிட்டார்.

டெல்லி கலவரத்தை அரசியலாக்கக் கூடாது என்றும், தேசிய பிரச்னையில் மலிவான அரசியலை நிறுத்திக்கொள்ளுமாறும் மத்திய சட்ட அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.


Share this News:

Leave a Reply