சென்னை (26 பிப் 2020): முஸ்லிம்களுக்கு ஒன்று என்றால் முன்னே நிற்பேன் என்றீர்களே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு ரஜினி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
டெல்லியில் நடக்கும் போராட்டங்களுக்கு, மத்திய உளவுத்துறையின் தோல்வியே முக்கிய காரணம். இந்த விவகாரத்தில் மத்திய அரசை கண்டிக்கிறேன். டிரம்ப் போன்ற உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது மத்திய உளவு அமைப்புகள் மிகுந்த கவனத்துடன் இருந்திருக்க வேண்டும்.
டெல்லி வன்முறையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியிருக்க வேண்டும். இனிமேலாவது ஜாக்கிரதையாக இருப்பார்கள் என எதிர்பார்க்கிறேன். உளவுத்துறை தோல்வியடைந்திருக்கிறது என்றால் அது உள்துறையின் தோல்வி என்று பொருள் கொள்ள வேண்டும். சில அரசியல் கட்சிகள் மதத்தின் பெயரால் மக்களை தூண்டி வருகின்றனர்.
குடியுரிமை சட்ட திருத்தம் திரும்ப பெறப்படாது. இவர்கள் என்ன போராட்டம் செய்தாலும், அதனால் பிரயோஜனம் ஏற்படாது. இதை சொன்னால் நான் பிஜேபியின் ஊதுகுழல், நான் பிஜேபி ஆள், பிஜேபி என் பின்னால் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இந்த விமர்சனத்தை மூத்த பத்திரிகையாளர்கள், மூத்த அரசியல் விமர்சகர்கள் சொல்வதுதான் வேதனையாக இருக்கிறது” என்றார்,