மீண்டும் காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியின் பெயர் பரிந்துரை!
புதுடெல்லி (14 செப் 2022): காங்கிரஸின் தலைவராக சோனியா காந்தியின் பெயரை பரிந்துரைக்க அனைத்து மாநில காங்கிரஸ் பிரிவுகளும் தீர்மானம் நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதேச காங்கிரஸ் கமிட்டி, சோனியா காந்தியை தலைவர் பதவிக்கு இம்மாதம் 20ஆம் தேதிக்குள் முன்னிறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17ம் தேதி நடைபெறுகிறது….