குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடரும் பெண்களின் சரித்திரப் போராட்டம் -வீடியோ!

Share this News:

புதுடெல்லி (19 ஜன 2020): தேசிய கொடியுடனும் தேசிய கீதத்துடனும் டெல்லி ஷஹீன் பாக்கில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்துசெய்யக் கோரி, கடந்த ஒரு மாதமாக நாட்டின் பல்வேறு இடங்களிலும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

இந்நிலையில் டெல்லி ஷஹீன் பாக் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக பெண்கள் கலந்துகொண்டு , கடந்த ஒரு மாதமாகத் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து உத்திர பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.

உத்திர பிரதேசம் பிரயாக்ராஜ் பகுதியில் நடந்து வரும் போராட்டக் காரர்களுக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்து போராட்டக் காரர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டனர். எனினும் போராட்டக் காரர்கள் அங்கிருந்து நகராமல் தொடர்ந்து போராட்டத்தை தொடர்கின்றனர்.

https://twitter.com/RizviUzair/status/1218251639565381632

மேலும் தேசிய கீதம், தேசிய கொடியுடன் பெண்கள் நடத்தும் போராட்டம் சரித்திரத்தில் எழுதப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.


Share this News:

Leave a Reply