யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து போட்டியிடும் சந்திர சேகர் ஆசாத்!

Share this News:

லக்னோ (20 ஜன 2022): பீம் ஆர்மி தலைவரும், ஆசாத் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவருமான சந்திரசேகர் ஆசாத், உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து கோரக்பூர் நகர் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

உ.பி. சட்டசபை தேர்தலில், சமாஜ்வாதி கட்சியுடன் கைகோர்ப்பதற்கு பதிலாக, தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என சந்திரசேகர் ஆசாத் செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார். 33 இடங்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியலையும் அவர் வெளியிட்டார்.

உத்தரப் பிரதேசத்தில் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு, மார்ச் 10ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.


Share this News:

Leave a Reply