கொச்சி (15 மார்ச் 2020): இங்கிலாந்தை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து கொச்சி விமான நிலையத்தில் அனைத்து பயணிகளும் எமிரேட்ஸ் விமானத்திலிருந்து வெளியெற்றப்பட்டனர்.
கொரோனா பீதி உலகையே அதிர வைத்துள்ளது. இந்தியாவில் முதலாவதாக கொரோனா பாதித்த மாநிலம் கேரளா.
இந்நிலையில் கொச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 289 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்த 19 பேர் கொண்ட சுற்றுலா பயணிகளும் பயணித்தனர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டது. உடனே அந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ளவிருந்த 289 பேரையும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். மேலும் அனைவருக்குமே கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டு. பின்பு இங்கிலாந்து சுற்றுலா பயணிகள் தவிர மற்ற பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. இதனால் கொச்சி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.