வாஷிங்டன் (15 மார்ச் 2020): அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.
சீனாவில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு, உலகம் முழுவதும், 116 நாடுகளில், பரவி பலரை பலி வாங்கியுள்ளது . அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகி உள்ளனர். 20 மாகாணங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனப்படுத்தினார். கொரோனாவை கட்டுப்படுத்திட நிதியும் ஒத்துக்கினார்.
இது குறித்து டிரம்ப் அளித்த பேட்டயில், கொரோனா உயிரிழப்பை குறைக்கும் நடவடிக்கையாக மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து அமெரிக்கர்களுக்கும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதற்கு பணம் செலவாகும் எனினும் இலவசம் தான். நானும் உடல் பரிசோதனை செய்து கொண்டேன். கொரோனா பற்றி அமெரிக்கர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றார்.
இந்நிலையில் டிரம்ப்பிற்கு கொரோனா தொற்று இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதிபர் மாளிகை மருத்துவ குழுவினரும் உறுதி செய்துள்ளனர்.