துபாயிலிருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Share this News:

புதுடெல்லி (02 மார்ச் 2020): டெல்லி மற்றும் தெலங்கானாவில் இருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சீனாவிலிருந்து உலகமெங்கும் பரவியுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவில் ஏற்கனவே, கேரளாவில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்து வீடு திரும்பிய நிலையில், தற்போது டெல்லி மற்றும் தெலங்கானாவுக்கு தலா ஒருவர் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

கரோனா பாதித்த இருவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இருவரும் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இத்தாலியில் இருந்து தில்லி வந்த நபருக்கும், துபாயில் இருந்து தெலங்கானாவுக்கு வந்தவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், கரோனா வைரஸ் பாதித்த இருவரின் உடல்நிலையும் தற்போது சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply