புதுடெல்லி (02 மார்ச் 2020): நடிகர் ரஜினியும் கமலும் இணைந்து படம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக இன்று சென்னையில் இருந்து டில்லிக்கு புறப்பட்டுச் சென்ற அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்ளின் கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது, ரஜினி – கமல் இணைந்து நடிப்பார்கள் என்ற பேச்சு எழுகிறது என்ற கேள்விக்கு, பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினியும் கமல்ஹாசனும் இணைந்தால் எந்த பாதிப்பும் இல்லை, அதேசமயம் ரஜினி – கமல் இணைந்தால் 16 வயதினிலே மாதிரி ஒரு நல்ல படம் கிடைக்கலாம் என கிண்டலுடன் தெரிவித்தார்.
சமீபத்தில், டெல்லி சம்பவம் குறித்து பேசிய ரஜினி மத்திய அரசை சாடி பேசியதும், அதற்கு ஆதரவாக கமல்ஹாசன் டுவிட்டரில் பாராட்டிப் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.