இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு!

Share this News:

மும்பை (24 ஜன 2020): இந்தியாவில் இருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது.

இந்நிலையில் சீனாவிலிருந்து இந்தியா வந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு சளி மற்றும் இருமல் இருந்ததால், அவர்கள் இங்கு வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களது அடையாளம் வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வகை வைரஸ் நோயால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 25-ஆக உயா்ந்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 647-ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply